News September 18, 2025

FLASH: ஏற்றத்தில் முடிந்த இந்திய பங்குச்சந்தைகள்!

image

பங்குச்சந்தைகள் இன்று(செப்.18) ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. சென்செக்ஸ் 320 புள்ளிகள் உயர்ந்து 83,013 புள்ளிகளிலும், நிஃப்டி 93 புள்ளிகள் உயர்ந்து 25,423 புள்ளிகளிலும் வர்த்தகத்தை முடித்துள்ளன. HDFC Bank, Infosys, Reliance, ICICI Bank, Maruti Suzuki உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு பெரும் லாபத்தை கொடுத்துள்ளன. நீங்கள் வாங்கிய SHARE லாபம் தந்ததா?

Similar News

News September 18, 2025

ஆசிய கோப்பை: AFG முதலில் பேட்டிங்

image

ஆசிய கோப்பையில், இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்கிறது. பேட்டிங்கில் இலங்கையும், பந்துவீச்சில் ஆப்கானிஸ்தானும் வலுவாக காணப்படுவதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும். போட்டியில் ஆப். அணி வெற்றிபெறுவது அவசியம், தோற்கும் பட்சத்தில் குரூப் B-ல் இருந்து சூப்பர் 4 சுற்றுக்கு இலங்கை, வங்கதேச அணிகள் முன்னேறிவிடும். குரூப் B-ல் இன்றுடன் லீக் போட்டிகள் முடிவடைகின்றன.

News September 18, 2025

BREAKING: தவெகவில் முக்கிய மாற்றம் செய்த விஜய்

image

தவெகவில் நிர்வாக ரீதியாக சில மாற்றங்களை செய்து விஜய் அறிவித்துள்ளார். அதன்படி, CTR நிர்மல்குமாருக்கு இணை பொதுச்செயலாளர் பொறுப்புடன் ஐடி விங், வழக்கறிஞர் அணியும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், துணைப் பொதுச்செயலாளர் ராஜ்மோகனுக்கு ஊடக அணி கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், விஜயலட்சுமி, அருள்பிரகாசம், ஸ்ரீதரன், சுபத்ரா ஆகிய 4 பேர் துணைப் பொதுச்செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

News September 18, 2025

RAC டிக்கெட்டை கன்ஃபார்ம் செய்வது எப்படி?

image

ரயில் புறப்பட்ட 1 மணி நேரத்திற்குள் TTE, உங்களுக்கான இருக்கையை நியமித்து தர வேண்டும் என்ற விதி உள்ளது. *முதலில் TTE-ஐ தொடர்புகொண்டு, காலியாகவுள்ள இருக்கையை ஒதுக்கி தருமாறு முறையிடுங்கள். *Chart தயாரான பிறகு, IRCTC செயலியில் ‘Chart Vacancy’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். *ரயில் எண்ணை உள்ளிட்டால், நீங்கள் செல்லும் ரயிலிலுள்ள காலி இருக்கைகள் காட்டும். *அதை TTE-யிடம் தெரிவித்தும் முறையிடலாம்.

error: Content is protected !!