News August 11, 2025
தோல்வியால் அடாவடியில் இறங்கிய பாக்., அரசு

‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையால் களத்தில் தோற்ற பாகிஸ்தான், இந்திய தூதரக ஊழியர்களிடம் அத்துமீறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாக்.கில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளின் வீடுகள், அலுவலகங்களில் அத்துமீறி நுழைவது, திடீர் சோதனை செய்வது என தொல்லை கொடுப்பதுடன், அத்தியாவசியமான கேஸ், தண்ணீர் சப்ளையை கூட தடுப்பதாக கூறப்படுகிறது. இது சர்வதேச நெறிமுறைகளுக்கு மாறானது என இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
Similar News
News August 12, 2025
IPL அணி வாங்கும் எண்ணம்? சல்மான் கான் பதில்

ISPL என்ற டென்னிஸ் பந்து T10 கிரிக்கெட் லீக்கில் நியூ டெல்லி அணியின் உரிமையாளராக சல்மான் கான் உள்ளார். இதற்கான நிகழ்ச்சியில் சல்மான் கான் பங்கேற்ற போது, IPL அணிகளை வாங்கும் எண்ணம் உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, 2008-ம் ஆண்டு IPL அணி வாங்குவதற்கு அழைப்பு வந்தது என்றும், ஆனால் அதனை அந்த சமயத்தில் ஏற்கவில்லை என்றார். அதை நினைத்து தனக்கு எவ்வித வருத்தமும் இல்லை என்றும் பதிலளித்துள்ளார்.
News August 12, 2025
மகாராஷ்டிராவில் கோர விபத்து: 8 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிரா மாநிலம் ஹெத் மலைப்பகுதியில் கேஷ்திர மகாதேவ் குண்டேஷ்வர் என்ற சிவன் கோவில் உள்ளது. இக்கோவிலை தரிசனம் செய்வதற்காக 40 பக்தர்களுடன் வந்த மினி சரக்கு லாரி ஒன்று எதிர்பாராத விதமாக பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 8 பெண்கள் உயிரிழந்த நிலையில், 29 பேர் படுகாயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ₹4 லட்சம் நிவாரணம் அம்மாநில அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 12, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: அறிவுடைமை ▶குறள் எண்: 425 ▶குறள்: உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்ல தறிவு. ▶ பொருள்: உயர்ந்தோரே உலகோர் எனப்படுவதால் அவர்களுடன் நட்பு கொண்டு இன்பம் துன்பம் ஆகிய இரண்டையும் ஒரே நிலையாகக் கருதுவதே அறிவுடைமையாகும்.