News February 27, 2025
அரிசி விலை மூட்டைக்கு ரூ.50 குறைப்பு

மாநிலத்தில் அரிசி மொத்த விலை கிலாே ரூ.2 குறைக்கப்படுவதாக அரிசி ஆலை உரிமையாளர்கள், வணிகர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். பிற மாநிலங்களில் இருந்து நெல் வரத்து அதிகரித்ததால், சன்னம், மிக சன்னம், பிபிடி, 1638 ரக அரிசிகளின் விலை குறைக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். சில்லரை விலையில் கிலோ ரூ.1.50 குறையக்கூடும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த அறிவிப்பால், 25 கிலோ அரிசி மூட்டை ரூ.50 குறைக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 28, 2025
இன்றைய பொன்மொழிகள்

▶மதிப்பற்ற மக்கள் உணவுக்காக மட்டுமே வாழ்கிறார்கள்; மதிப்புடைய மக்கள் வாழ்வதற்காக மட்டுமே உண்கிறார்கள் ▶உங்களுக்கு எதுவும் தெரியாது என்பதை தெரிந்திருப்பதிலேயே உண்மையான ஞானம் இருக்கிறது▶ஒவ்வொரு நடவடிக்கையும் அதன் மகிழ்ச்சியையும் அதன் விலையையும் கொண்டுள்ளது ▶அனைத்து மனித ஆசிர்வாதங்களில் மரணம் மிக பெரியதாக இருக்கலாம்.
News February 28, 2025
200 இடங்களில் திமுக வெல்லும்: நடிகர் வடிவேலு

ஒவ்வொரு குடும்பத்தின் மூத்த மகனாக முதல்வர் ஸ்டாலின் இருப்பதாக நடிகர் வடிவேலு புகழாரம் சூட்டியுள்ளார். தமிழ்நாட்டுக்கு அடையாளம் தமிழ் மொழிதான் என்றும், யாருக்கும் எந்த மொழியையும் கட்டாயப்படுத்தி திணிக்க முடியாது என்றும் கூறியுள்ளார். வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக மீண்டும் வெல்லும் எனவும், 200 இடங்களில் கண்டிப்பாக பிடிப்பார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
News February 28, 2025
மகளிர் பிரீமியர் லீக்: குஜராத் அபார வெற்றி

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் பெங்களூரு அணியை வீழ்த்தி குஜராத் வென்றது. முதலில் விளையாடிய பெங்களூரு அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் கனிகா அதிகபட்சமாக 33 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து விளையாடிய குஜராத், 16.3 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. அந்த அணியின் ஆஷ்லே கார்ட்னர் 58 ரன்களும், போப் லிட்ச்பீல்ட் 30 ரன்களும் எடுத்தனர்.