News February 27, 2025

இதை செய்யவில்லை என்றால் ரேஷன் அட்டை நீக்கப்படுமா?

image

மாநிலம் முழுவதும் 3.56 கோடி முன்னுரிமை (PHH), அந்தியோதயா ரேஷன் அட்டைதாரர்களில் இதுவரை சுமார் 76 லட்சம் பேர் விரல் ரேகை பதிவு செய்யவில்லை. இதற்கு மத்திய அரசு வழங்கிய கால அவகாசம் வரும் மார்ச் 31இல் முடிவடைகிறது. அதற்குள் விரல் ரேகை பதிவு செய்யாதவர்கள் பதிவு செய்துவிடவும். மார்ச்சுக்கு பின் இலவச அரிசி தொடர்ந்து கிடைக்குமா, இல்லையென்றால் அந்த அட்டைகள் நீக்கப்படுமா? என சந்தேகம் எழுந்துள்ளது.

Similar News

News February 28, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: பயனில சொல்லாமை
▶குறள் எண்: 192
▶குறள்:
பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலிற் றீது.
▶பொருள்: பலர் முன்னே பயனில்லாத சொற்களைச் சொல்லுதல், நண்பரிடத்தில் அறம் இல்லா செயல்களைச் செய்தலை விடத் தீமையானதாகும்.

News February 28, 2025

ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவா அணி வெற்றி

image

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் பஞ்சாப் அணியை வீழ்த்தி கோவா வென்றது. 13 அணிகள் இடையிலான 11வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று டெல்லியில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாப் – கோவா அணிகள் மோதின. தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய கோவா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

News February 28, 2025

இன்றைய (பிப். 28) நல்ல நேரம்

image

▶பிப்ரவரி- 28 ▶மாசி – 16 ▶கிழமை: வெள்ளி
▶நல்ல நேரம்: 09:30 AM – 10:30 AM & 04:30 PM – 05:30 PM
▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 01:30 AM & 06:30 PM – 07:30 PM
▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM
▶எமகண்டம்: 03:00 PM – 04:30 AM
▶குளிகை: 07:30 AM- 09:00 PM
▶திதி: பிரதமை ▶சூலம்: மேற்கு
▶பரிகாரம்: வெல்லம் ▶சந்திராஷ்டமம்: ஆயில்யம்
▶நட்சத்திரம் : சதயம் ம 3.04

error: Content is protected !!