News February 27, 2025
தீண்டாமையை கடைபிடிக்கும் மரங்கள்

காடுகளில் வளரும் சிலவகை மரங்கள் ஒன்றை ஒன்று தொட்டுக் கொள்வதில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். இதனை ஆங்கிலத்தில் ‘Crown Shyness’ என்று அழைக்கின்றனர். இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. குறிப்பாக, அருகில் இருக்கும் மரத்திற்கு கிடைக்கும் சூரிய ஒளியை மறைத்துவிடக் கூடாது என்பதற்காக மரங்கள் இந்த முறையை கடைபிடிப்பதாக சொல்லப்படுகிறது. நீங்கள் இதை நோட் பண்ணியிருக்கீங்களா?
Similar News
News February 28, 2025
மகளிர் பிரீமியர் லீக்: குஜராத் அபார வெற்றி

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் பெங்களூரு அணியை வீழ்த்தி குஜராத் வென்றது. முதலில் விளையாடிய பெங்களூரு அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் கனிகா அதிகபட்சமாக 33 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து விளையாடிய குஜராத், 16.3 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. அந்த அணியின் ஆஷ்லே கார்ட்னர் 58 ரன்களும், போப் லிட்ச்பீல்ட் 30 ரன்களும் எடுத்தனர்.
News February 28, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: பயனில சொல்லாமை
▶குறள் எண்: 192
▶குறள்:
பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலிற் றீது.
▶பொருள்: பலர் முன்னே பயனில்லாத சொற்களைச் சொல்லுதல், நண்பரிடத்தில் அறம் இல்லா செயல்களைச் செய்தலை விடத் தீமையானதாகும்.
News February 28, 2025
ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவா அணி வெற்றி

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் பஞ்சாப் அணியை வீழ்த்தி கோவா வென்றது. 13 அணிகள் இடையிலான 11வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று டெல்லியில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாப் – கோவா அணிகள் மோதின. தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய கோவா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.