News February 27, 2025
29 வருஷத்துக்கு அப்புறம்! பாகிஸ்தான் பரிதாபங்கள்!!

சாம்பியன்ஸ் டிராஃபி தொடரை நடத்தும் பாகிஸ்தான், லீக் சுற்றுடன் வெளியேறிய பரிதாபம் அனைவரும் அறிந்ததே. 29 ஆண்டுகளுக்குப் பிறகு ICC தொடரை நடத்தும் PAK, CTஇல் ஒரு வெற்றி கூட பெறவில்லை. சோகமான விஷயம் என்னவென்றால், குரூப் A பிரிவில் ஒரே ஒரு புள்ளியை பெற்ற அந்த அணி பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது. மழை வந்ததால்தான் அந்த ஒரு புள்ளியும் கிடைத்ததாக, PAK அணியை ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
Similar News
News February 28, 2025
வாட்டி வதைக்கும் வெயில்: ஹீட் ஸ்ட்ரோக்-க்கு உடனே சிகிச்சை

கோடை வெயிலால் ஏற்படும் வெப்ப வாதத்திற்கு சிகிச்சை அளிக்கும் வகையில், ஆரம்ப சுகாதார நிலையங்கள் தயார் நிலையில் இருக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, ➤ஓ.ஆர்.எஸ். பாக்கெட்டுகள், ➤உப்பு-சர்க்கரை கரைசல், ➤குடிநீர் வசதி, ➤மருந்துகள் & தடுப்பூசிகள் மற்றும் ஹீட் ஸ்ட்ரோக் என்ற வெப்பவாத பாதிப்புக்கு துரித சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது
News February 28, 2025
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பயோ மெட்ரிக் பதிவு கட்டாயம்?

புலம்பெயர் தொழிலாளர்களால் தமிழகத்தில் குற்றச்சம்பவங்கள் நடப்பதைத் தடுக்க, அவர்களின் பயோமெட்ரிக் பதிவை கட்டாயமாக்க அரசுக்கு 5ஆவது காவல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. அவர்களை தமிழகத்துக்கு அழைத்து வரும் கான்டிராக்டர்களின் பயோ மெட்ரிக்கையும் பதிவிட வேண்டும், அவர்களுக்கு வீடு அளிக்கும் உரிமையாளர்கள் அடையாள சான்றுகளை வாங்கி காவல்நிலையத்தில் அளிக்க வேண்டுமென்றும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
News February 28, 2025
ஏர்போர்ட்டில் இனி டீ ₹10

கொல்கத்தாவை தொடர்ந்து சென்னை ஏர்போர்ட்டிலும் `உடான் யாத்ரீ கஃபே’ என்ற பெயரில் மலிவு விலை உணவகத்தை மத்திய அமைச்சர் ராம் மோகன் திறந்து வைத்தார். ஏர்போர்ட்டில் ஒரு டீ, காபி குடிக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ₹100 வரை செலவழிக்க வேண்டிய சூழல் இருந்தது. ஆனால், இனி அவ்வளவு பணம் எல்லாம் செலவு செய்ய வேண்டாம். டீ ₹10, காபி ₹20, தண்ணீர் பாட்டில் ₹10, சமோசா ₹20, வடை ₹20க்கு வாங்க முடியும்.