News February 27, 2025
MAAMEY ரெடியா! அஜித்தின் CRAZY WORLD LOADING

ஆதிக் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் டீசர் நாளை 7.03 PMக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 94 second ஓடக்கூடிய இந்த டீசரில் அஜித்தின் அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் இடம்பெறும் என்றும், ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் செதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதற்கான பிரத்யேக போஸ்டரில் CRAZY WORLD LOADING என குறிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News February 28, 2025
இரவில் நிம்மதியான தூக்கத்திற்கு..

நமது உடலில் சுரக்கும் மெலடோனின் என்ற ஹார்மோன்தான் நம்மை தூக்கத்திற்கு அழைத்துச் செல்கிறது. இந்த ஹார்மோன், இருட்டிய பின்னர்தான் சுரக்கத் தொடங்கும். அப்போது நாம் செல்ஃபோன் பார்த்துக் கொண்டு இருந்தால் இந்த ஹார்மோன் சுரக்காது. இதனால்தான், அத்தகைய வேளைகளில் நமக்கு தூக்கம் வருவதில்லை. எனவே தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் செல்ஃபோன் பார்ப்பதை நிறுத்திவிட்டால், நிம்மதியாக தூங்கலாம்.
News February 28, 2025
வாட்டி வதைக்கும் வெயில்: ஹீட் ஸ்ட்ரோக்-க்கு உடனே சிகிச்சை

கோடை வெயிலால் ஏற்படும் வெப்ப வாதத்திற்கு சிகிச்சை அளிக்கும் வகையில், ஆரம்ப சுகாதார நிலையங்கள் தயார் நிலையில் இருக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, ➤ஓ.ஆர்.எஸ். பாக்கெட்டுகள், ➤உப்பு-சர்க்கரை கரைசல், ➤குடிநீர் வசதி, ➤மருந்துகள் & தடுப்பூசிகள் மற்றும் ஹீட் ஸ்ட்ரோக் என்ற வெப்பவாத பாதிப்புக்கு துரித சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது
News February 28, 2025
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பயோ மெட்ரிக் பதிவு கட்டாயம்?

புலம்பெயர் தொழிலாளர்களால் தமிழகத்தில் குற்றச்சம்பவங்கள் நடப்பதைத் தடுக்க, அவர்களின் பயோமெட்ரிக் பதிவை கட்டாயமாக்க அரசுக்கு 5ஆவது காவல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. அவர்களை தமிழகத்துக்கு அழைத்து வரும் கான்டிராக்டர்களின் பயோ மெட்ரிக்கையும் பதிவிட வேண்டும், அவர்களுக்கு வீடு அளிக்கும் உரிமையாளர்கள் அடையாள சான்றுகளை வாங்கி காவல்நிலையத்தில் அளிக்க வேண்டுமென்றும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.