News February 27, 2025
தங்கம் விலை சவரனுக்கு ₹320 குறைந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்.27) சவரனுக்கு ₹320 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹8,010க்கும், சவரன் ₹64,080க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி 1 கிராம் ₹106க்கும், 1 கிலோ ₹1,06,000க்கும் விற்பனையாகிறது. தங்கம் நேற்று சவரனுக்கு ₹200 குறைந்திருந்த நிலையில், 2வது நாளாக சரிவடைந்திருப்பது நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. உங்கள் கருத்து என்ன?
Similar News
News February 27, 2025
PAK-BAN போட்டி கைவிடப்பட்டது

சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான ஆட்டம் கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால், ஒரு பந்துகூட வீசப்படாமல் போட்டி கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதையடுத்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. குரூப் A பிரிவில் இடம்பெற்றுள்ள இவ்விரு அணிகளும், ஏற்கெனவே தொடரிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
News February 27, 2025
பிரபல ஹாலிவுட் நடிகர், மனைவி மரணம்

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜென் ஹேக்மேன், மனைவி பெட்ஸி ஆரகவா சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். நியூ மெக்சிகோவில் உள்ள வீட்டில் 2 பேரும் சடலமாக கிடந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 பேர் மரணத்துக்கான காரணம் தெரியவில்லை. பிரெஞ்ச் கனெக்சன், நைட் மூவ்ஸ், சூப்பர் மேன் உள்ளிட்ட படங்களில் ஹேக்மேன் நடித்துள்ளார். சிறந்த நடிப்புக்காக 2 ஆஸ்கர், 3 கோல்டன் குளோப் விருதுகளை பெற்றுள்ளார்.
News February 27, 2025
இயக்குநர் அமீர் அக்கவுண்டில் பணம் செலுத்திய ஜாபர் சாதிக்

போதைப்பொருள் விற்று சம்பாதித்த பணத்தை இயக்குநர் அமீர் உள்ளிட்டோரின் வங்கிக் கணக்கில் ஜாபர் சாதிக் செலுத்தியுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. ஜாமின் மனு மீது சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்ற விசாரணையின்போது, சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலின் மூளையாக ஜாபர் செயல்பட்டதாக குற்றஞ்சாட்டிய ED, அவருக்கு ஜாமின் தந்தால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதாக அச்சம் தெரிவித்துள்ளது.