News February 27, 2025
இந்தி முகமூடியில் ஒளிந்திருக்கும் சமஸ்கிருதம்: CM

முகமூடி தான் இந்தி, உண்மையில் ஒளிந்திருப்பது சமஸ்கிருதமே என திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ் மொழியே திராவிட மொழிகளுக்கு எல்லாம் தாய். சமஸ்கிருதமும் சில மொழிகளும் கலந்து திரிபடைந்ததால் இந்தி உருவானது. மும்மொழி கொள்கையை ஏற்றால் சமஸ்கிருதமயமாக்கும் திட்டம் நிறைவேறிவிடும் என விளாசியுள்ள அவர், அது ஒருபோதும் தமிழ்நாட்டில் நடக்காது என்றும் சூளுரைத்துள்ளார்.
Similar News
News February 27, 2025
விவாகரத்து செய்தார் விஜய் பட நடிகை சம்யுக்தா

கணவரை விவாகரத்து செய்து விட்டதாக நடிகை சம்யுக்தா தெரிவித்துள்ளார். விஜய்யின் வாரிசு உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் சம்யுக்தா. விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று கலக்கி இருந்தார். அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கணவர் கார்த்திக் சங்கரை விவாகரத்து செய்து விட்டதாகப் பதிவிட்டுள்ளார். கார்த்திக்-சம்யுக்தா தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். கணவரை பிரிவதற்கான காரணத்தை அவர் வெளியிடவில்லை.
News February 27, 2025
சச்சின், கங்குலியை பின்னுக்கு தள்ளிய ஆஃப்கன் வீரர்

CT தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் ஆஃப்கன் வீரர் இப்ராஹிம் ஜாத்ரான் (177) முதலிடம் பிடித்துள்ளார். நேற்றைய ENG எதிரான போட்டியில் அவர் இத்தனை ரன்களை அடித்த நிலையில், இந்த பட்டியலில் இடம் பெறும் முதல் ஆஃப்கன் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இந்த பட்டியலில் 141* ரன்களுடன் கங்குலி 5ஆவது இடத்திலும், 141 ரன்களுடன் சச்சின் 6ஆவது இடத்திலும் உள்ளனர்.
News February 27, 2025
கிரிப்டோ கரன்சி மோசடி: தமன்னாவுக்கு தொடர்பா?

இணையதளம் மூலம் நடக்கும் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. அதிலும் உழைப்பு இல்லாமல் கிரிப்டோ கரன்சி மூலம் சம்பாதிக்கலாம் என்ற கவர்ச்சி விளம்பரங்களுக்கு நிறைய பேர் பலியாகி வருகின்றனர். தற்போது அப்படியொரு கிரிப்டோ கரன்சி மோசடியில் நடிகை தமன்னாவின் பெயரும் அடிபட்டுள்ளது. மோசடி கும்பலுடன் அவருக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் புதுச்சேரி போலீசார் விசாரிக்கவுள்ளனர்.