News February 27, 2025
அதிமுக – தவெக கூட்டணி.. ஆதவ் கொடுத்த ஹிண்ட்!

2026 தேர்தலில் அதிமுக கூட்டணியில் தவெக சேர உள்ளதாக கூறப்படுகிறது. DMK, BJPயை கடுமையாக விமர்சிக்கும் விஜய் அதிமுகவுடன் மென்மையான போக்கையே கடைபிடிக்கிறார். இதனிடையே நேற்று TVK விழாவில் பேசிய ஆதவ் அர்ஜுனா, வரும் தேர்தலில் உங்களுக்கு எதிர்க்கட்சி கூட இல்லை, அதில் விஜய் இருப்பார் எனக் கூறியிருந்தார். இது 2011 தேர்தலை போல் என்பதற்கான ஹிண்ட் என பலரும் கருத்து கூறி வருகின்றனர். உங்கள் கருத்து என்ன?
Similar News
News February 27, 2025
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது

முன்னாள் அமைச்சரும், அதிமுக மூத்த தலைவருமான ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக நிர்வாகிகள் மீதான தாக்குதலைக் கண்டித்து திருக்கழுக்குன்றத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதில், கலந்துகொள்ள சென்ற அதிமுகவினரை தடுத்து போலீசார் கைது செய்தனர். அப்போது ஜெயக்குமார் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் அவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
News February 27, 2025
ஹிந்திக்கு இடம்கொடுத்த மொழிகள் தொலைந்தன: CM

தமிழ் விழித்தது; தமிழினத்தின் பண்பாடு பிழைத்தது என CM ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். X பக்கத்தில் தமிழ் வாழ்க, SaveIndianLanguages என்ற ஹேஷ்டேக்குகளுடன் பதிவிட்டிருக்கும் அவர், ஹிந்திக்கு இடம் கொடுத்த சில மொழிகள் இருந்த இடம் தெரியாமல் தொலைந்தன எனக் குறிப்பிட்டுள்ளார். ஹிந்தித் திணிப்பை எதிர்ப்போம் என்ற தலைப்பில் தமிழைக் காக்க திமுக எடுத்த முன்னெடுப்புகளையும் டேக் செய்துள்ளார்.
News February 27, 2025
சூப்பர் ஸ்டாருடன் இணையும் பூஜா ஹெக்டே: ‘கூலி’ அப்டேட்

நடிகர் ரஜினிகாந்த நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தின் புதிய அப்டேட்டை சன் பிக்சர்ஸ் வெளியிட்டிருக்கிறது. நாகார்ஜூனா, உபேந்திரா, சத்யராஜ், செளபின் சாஹிர், ஸ்ருதிஹாசன் என பெரிய பட்டாளமே நடித்து வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில், அன்பறிவ் ஸ்டண்டில் உருவாகி வரும் இந்தத் திரைப்படத்தில் புதிதாக இளம் நடிகை பூஜா ஹெக்டேவும் இணைந்துள்ளார்.