News February 27, 2025
அசாமில் நிலநடுக்கம்: பொதுமக்கள் அதிர்ச்சி

அசாம் மாநிலத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையமானது தரைமட்டத்தில் இருந்து சுமார் 16 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக வங்கக்கடலில் நேற்று முன்தினம் அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News February 27, 2025
ஒற்றுமைக்கான மாபெரும் யாகம்: PM மோடி நெகிழ்ச்சி

பிரயாக்ராஜில் நடந்த மிகப் பெரிய திருவிழாவான கும்பமேளா நேற்றுடன் முடிந்துள்ளது. இதனை ஒற்றுமைக்கான மாபெரும் யாகம் சிறப்பாக நிறைவடைந்திருப்பதாக பிரதமர் மோடி தனது X பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பிரயாக்ராஜில் நடந்த ஒற்றுமைக்கான மகா கும்பமேளா 140 கோடி மக்களின் நம்பிக்கை. 45 நாட்களில் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பிரயாக்ராஜில் புனித நீராடியது மிகப் பெரிய விஷயம் எனவும் புகழ்ந்துள்ளார்.
News February 27, 2025
வந்தாச்சு Perplexity… இனி Paytm பண்ணு…!

இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் சூழலில், முறைகேடுகளில் இருந்து தப்பிக்க நம்பகமான தகவல்கள் தேவைப்படுகிறது. நிதி மேலாண்மை உள்ளிட்ட விவகாரங்களில் உடனடி முடிவெடுக்க வேண்டியிருக்கிறது. இதற்காக உலகின் முதல் AI ஆன Perplexityயுடன் கூட்டு சேர்ந்துள்ளது Paytm. உள்ளூர் மொழிகளில் இந்த ஏஐ கலக்கும் என்பதால் நிதி சார்ந்த சந்தேகங்களுக்கு இனி ஈஸியாக விடை காணலாம்.
News February 27, 2025
இளைஞர்கள் இதை கட்டாயம் செய்யனும்: ஞானேஷ்குமார்

வாக்களிப்பதின் மூலம் முதல் தேசிய கடைமையாற்றுங்கள் என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார். வாக்காளர்கள் நலனுக்காகவே தேர்தல் ஆணையம் எப்போதும் செயல்படும் எனவும், 18 வயது நிரம்பியவர்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், மார்ச் 4, 5ஆம் தேதிகளில் டெல்லியில் அனைத்து தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.