News February 27, 2025
குறைந்த போட்டியில் 50 விக்கெட்டை வீழ்த்திய ஆர்ச்சர்

ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக குறைந்த போட்டிகளில் 50 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் ஜோப்ரா ஆர்ச்சர் (30 போட்டிகள்) முதலிடத்தை பிடித்துள்ளார். நேற்றைய ஆப்கனுக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இந்த சாதனையை அவர் படைத்துள்ளார். ஜேம்ஸ் ஆண்டர்சன் – 31 , ஸ்டீவ் ஹார்மிசன் – 32 ,ஸ்டீவன் பின் – 33, டேரன் காப் – 34 போட்டிகளில் 50 விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.
Similar News
News February 27, 2025
வங்கதேசத்தில் ராணுவ ஆட்சிக்கும் செக்?

வங்கதேசத்தில் ஹஸீனாவின் ஆட்சி கலைப்புக்கு காரணமான மாணவ அமைப்பின் தலைவர் நஹித் இஸ்லாம், இடைக்கால அரசுக்கு நெருக்கடியை தந்திருக்கிறார். அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ள அவர் நாளை புதிய கட்சியை தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார். ஆளும் இடைக்கால அரசு மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபடுவதே தனது முடிவுக்கு காரணம் என்றும் கூறியுள்ளார். வங்கதேசத்தில் அடுத்து என்ன நடக்கப் போகிறதோ?
News February 27, 2025
2 நாளில் சவரனுக்கு ₹520 குறைந்த தங்கம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 2ஆவது நாளாக சரிவைக் கண்டுள்ளது. கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து ஏற்றத்திலிருந்த தங்கத்தின் விலை புதிய உச்சமாக கடந்த 25ஆம் தேதி ₹64,600க்கு விற்பனையானது. நேற்று (பிப்.26) சவரனுக்கு ₹200 குறைந்த நிலையில், இன்று (பிப்.27) ₹320 குறைந்து ₹64,080க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலையும் இந்த வாரத்தில் கிராமுக்கு ₹3 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News February 27, 2025
‘தனுஷ் 51’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள ‘குபேரா’ திரைப்படம் ஜூன் 20ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இப்படத்தை இயக்கியுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் படம் ரிலீசாக உள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் வெளியான இப்படத்தின் க்ளிம்ஸ் வீடியோ நல்ல வரவேற்பை பெற்றதால், இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.