News February 27, 2025
அடுத்த மகா கும்பமேளா எப்போது?

பிரயாக்ராஜ் நகரில் கடந்த 45 நாள்களாக நடைபெற்றுவந்த மகா கும்பமேளா இன்றோடு நிறைவு பெற்றது. இதனையடுத்து, 12 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் மகா கும்பமேளா 2037ஆம் ஆண்டு பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் நடைபெறும். இதற்கு முன்பாக, வரும் 2027ஆம் ஆண்டு நாசிக் நகரில் பூர்ண கும்பமேளா, 2033ஆம் ஆண்டு ஹரித்வாரில் மகா கும்பமேளா ஆகியவை நடைபெறவுள்ளன. நீங்கள் கும்பமேளாவில் புனித நீராடினீர்களா?
Similar News
News February 27, 2025
கேதார்நாத் கோயில் மே 2இல் திறப்பு

உத்தரகண்டில் உள்ள கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய புனித தலங்கள் மினி சார்தாம் என அழைக்கப்படுகின்றன. இமயமலையில் அமைந்துள்ள இந்த கோயில்கள் குளிர்காலத்தில் மூடப்பட்டு கோடையில் திறக்கப்படும். இந்த ஆண்டு கேதார்நாத் கோயில் நடை மே 2ஆம் தேதி காலை 7 மணிக்கு திறக்கப்படுகிறது. பத்ரிநாத் கோயில் மே 4 அன்றும், கங்கோத்ரி, யமுனோத்ரி கோயில் அக்ஷய திருதியை நாளான ஏப்.30 அன்றும் திறக்கப்படுகிறது.
News February 27, 2025
அதிமுக – தவெக கூட்டணி.. ஆதவ் கொடுத்த ஹிண்ட்!

2026 தேர்தலில் அதிமுக கூட்டணியில் தவெக சேர உள்ளதாக கூறப்படுகிறது. DMK, BJPயை கடுமையாக விமர்சிக்கும் விஜய் அதிமுகவுடன் மென்மையான போக்கையே கடைபிடிக்கிறார். இதனிடையே நேற்று TVK விழாவில் பேசிய ஆதவ் அர்ஜுனா, வரும் தேர்தலில் உங்களுக்கு எதிர்க்கட்சி கூட இல்லை, அதில் விஜய் இருப்பார் எனக் கூறியிருந்தார். இது 2011 தேர்தலை போல் என்பதற்கான ஹிண்ட் என பலரும் கருத்து கூறி வருகின்றனர். உங்கள் கருத்து என்ன?
News February 27, 2025
ஐ.எஸ்.எல். கால்பந்து: பஞ்சாப் Vs கோவா இன்று மோதல்

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் பஞ்சாப் – கோவா அணிகள் இன்று மோதுகின்றன. 13 அணிகள் பங்கேற்கும் 11வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் கோவா அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. அதேவேளையில், பஞ்சாப் அணி 11வது இடத்தில் பின்தங்கியுள்ளது. மாலை 7.30க்கு ஆட்டம் நடைபெறவுள்ளது.