News February 27, 2025
பாக். கிரிக்கெட் வீரர் பஹார் ஜமான் ஓய்வு பெற முடிவு

உடல்நல பிரச்னை காரணமாக சாம்பியன்ஸ் டிராபியுடன் பாகிஸ்தான் ஓபனிங் பேட்ஸ்மேன் பஹார் ஜமான், ODI கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தியதாகவும், விரைவில் ஓய்வு முடிவை அவர் வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது. 2017 CT இறுதிப் போட்டியில், இந்தியாவுக்கு எதிரான அவரின் சதமே பாக்., பட்டம் வெல்ல காரணமாக அமைந்தது.
Similar News
News February 27, 2025
பிரசாந்த் கிஷோரை பாராட்டிய சீமான்

கெட் அவுட் என்று கையெழுத்து போட மறுத்த பிரசாந்த் கிஷோரை தான் பாராட்டுவதாக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். அவரது மொழியை கெட் அவுட் என்று சொல்ல அவருக்கு மனதில்லை, அதுபோல நம் மொழியை விட்டுக்கொடுக்க நமக்கு மனமில்லை எனவும் தெரிவித்தார். இந்த சண்டை தவிர்க்க முடியாத போர் என்றும், இதில் வென்று மொழியை காக்கும் வரையிலும் சண்டை தொடரும் எனவும் குறிப்பிட்டார்.
News February 27, 2025
உ.பி. வாரியர்சை வீழ்த்திய மும்பை அணி

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் உ.பி. வாரியர்சை மும்பை அணி வென்றது. முதலில் ஆடிய உ.பி. வாரியர்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கிரேஸ் ஹாரிஸ் 45 ரன்கள் எடுத்தார். 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ், 17 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழந்து இலக்கை எட்டியது. அந்த அணியின் ஸ்கிவர்-ப்ரண்ட் 75 ரன்கள் எடுத்தார்.
News February 27, 2025
மகா கும்பமேளா நிறைவு: 68 கோடி பக்தர்கள் நீராடினர்

உ.பி பிரயாக்ராஜ் நகரில் 45 நாட்களாக நடைபெற்ற மகா கும்பமேளா நிறைவடைந்தது. கடந்த மாதம் 13ஆம் தேதி பவுர்ணமி தினத்தன்று தொடங்கிய மகா கும்பமேளாவில், இதுவரை 68 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். கடைசி நாளில் லட்சக்கணக்கான மக்கள் புனித நீராடினர். மகா கும்பமேளா இனி 2169ஆம் ஆண்டுதான் நடைபெறும் என்று கூறப்படுகிறது.