News February 26, 2025

கடன் வாங்கி ஊழல் செய்யும் விளம்பர அரசு: ஆதவ் அர்ஜுனா

image

திராவிட கட்சிகள் கடன் வாங்கி ஊழல் செய்து மக்களுக்கு சுமையை சேர்த்து வைத்துள்ளதாக ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டியுள்ளார். புஸ்ஸி ஆனந்திற்கும், தனக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை எனக் கூறிய அவர், பிரித்தாலும் கொள்கையை திமுகவினர் தேடுவதாகக் சாடினார். விளம்பரத்திற்காக சினிமாவில் நடித்த உதயநிதி தற்போது துணை முதல்வராக வளர்ந்தது தான் திமுகவின் சாதனை என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Similar News

News March 12, 2026

அக்சரிடம் மன்னிப்பு கேட்டேன்: சூர்யகுமார்

image

T20 WC சூப்பர் 8 சுற்றில் SA-க்கு எதிரான போட்டியில் அக்சர் படேலை அணியில் சேர்க்காததற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டதாக சூர்யகுமார் தெரிவித்தார். அதற்காக அக்சர் தன்னிடம் கோபத்தை வெளிப்படுத்தியதாகவும் கூறினார். நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக அக்சர் விளையாடாத நிலையில், SA-க்கு எதிரான போட்டியில் அவருக்கு பதிலாக வாஷிங்டன் விளையாடினார். அதில் இந்தியா தோல்வி அடைந்தது.

News March 12, 2026

மோடி ஆட்சியில் 1.50 லட்சம் விவசாயிகள் தற்கொலை:ரகுபதி

image

விவசாயிகளுக்கு எதிராக திமுக செயல்படுவதாக PM மோடி வைத்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார். 3 வேளாண் சட்டங்கள் உள்பட விவசாயிகளுக்கு எதிராக அனைத்தையும் செய்துவிட்டு அவர்களை பற்றி பேச மோடிக்கு எந்த உரிமையும் இல்லை என அவர் சாடியுள்ளார். மோடி ஆட்சியில் 1.5 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், தேர்தல் வந்தாலே TN மீது PM-க்கு பாசம் வந்துவிடும் எனவும் விமர்சித்துள்ளார்.

News March 12, 2026

3 சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. அதிரடி தீர்ப்பு

image

நெல்லை, மேலப்பாளையத்தில் 2023-ம் ஆண்டில் 3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இந்நிலையில் அந்த வழக்கை விசாரித்த நெல்லை போக்சோ கோர்ட், 40 வயதான குற்றவாளி ஆனந்த சேகருக்கு தூக்கு தண்டனை விதித்து இன்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. அத்துடன் 3 சிறுமிகளுக்கும் தலா ₹7 லட்சத்தை இழப்பீடாக வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!