News January 14, 2025

ஆடத் தெரியாதவர் இந்திய அணிக்கு பயிற்சியாளரா?

image

ஆஸ்திரேலியாவில் இந்திய அணியின் மோசமான ஆட்டத்துக்கு கவுதம் கம்பீரும் ஒரு காரணம் என்று ENG அணியின் முன்னாள் வீரர் மாண்ட்டி பனேசர் சாடியுள்ளார். இது குறித்து பேசிய அவர், “கவுதமுக்கு ஸ்விங் ஆகும் பந்துகளை ஆடத் தெரியாது. அவர் எப்படி பயிற்சியாளர் ஆக முடியும். ODI, T20 என்றால் கம்பீர் சரி வருவார். ஆனால், TEST போட்டிக்கு VVS லஷ்மண் போன்ற வீரரைத்தான் பயிற்சியாளராக நியமித்திருக்க வேண்டும்” என்றார்.

Similar News

News December 9, 2025

விருதுநகர் அருகே ஒருவர் குத்திக் கொலை

image

விருதுநகர் அருகே இ.முத்துலிங்காபுரத்தை சேர்ந்தவர் புஷ்பராஜ்(40). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த பாலாஜி(37) என்பவரும் நேற்று மாலை அப்பகுதியில் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் இதில் ஆத்திரமடைந்த பாலாஜி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் புஷ்பராஜை மார்பு, கழுத்தில் குத்தி கொலை செய்த நிலையில் பாலாஜியை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

News December 9, 2025

நாதகவில் இருந்து விலகல்.. புதிய கட்சி உதயம்

image

நாதக ராமநாதபுரம் தொகுதி நிர்வாகிகள் அனைவரும் கூண்டோடு அக்கட்சியில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கியுள்ளனர். மாவட்டச் செயலாளராக இருந்த கண்.இளங்கோ தலைமையில் ‘மேதகு நாம் தமிழர் கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கப்பட்டுள்ளது. திராவிட கட்சிகளுக்கு எதிராக நாதக செயல்படவில்லை என குற்றஞ்சாட்டிய கண்.இளங்கோ, வெறுமனே பேசினால் மட்டுமே ஆட்சியை பிடித்துவிடலாம் என நாதக தலைமை நம்புகிறது என சாடியுள்ளார்.

News December 9, 2025

நார்த்தங்காயின் நன்மைகள்

image

நார்த்தங்காயில் இரும்பு சத்து, கால்சியம், வைட்டமின் சி & பி அதிகம் நிறைந்துள்ளது. நார்த்தங்காய் ஊறுகாய் போட மட்டுமல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பல்வேறு நன்மைகளை தருகின்றன. அவை என்னென்ன நன்மைகள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!