News January 14, 2025

இன்று முதல் இந்திய ஓபன் பாட்மின்டன்

image

இந்திய ஓபன் ‘சூப்பர் 750’ பாட்மின்டன் தொடர் டெல்லியில் இன்று தொடங்குகிறது. இதில், பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் சிந்து களமிறங்குகிறார். திருமணத்திற்கு பிறகு சிந்து விளையாடும் முதல் போட்டி இதுவாகும். ஆண்கள் இரட்டையரில், இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி களமிறங்குகிறது. சொந்த மண்ணில் 2வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்வார்கள் என அனைவரின் எதிர்பார்ப்பும் இவர்கள் மீதே உள்ளது.

Similar News

News December 9, 2025

திமுக அரசை தூக்கி அடிப்போம்: ஹெச்.ராஜா

image

திமுக அரசு இந்து விரோத அரசாக செயல்பட்டு வருகிறது என ஹெச்.ராஜா சாடியுள்ளார். வரும் தேர்தலில் முக்கிய சாராம்சமாக திருப்பரங்குன்றம் பிரச்னை தான் இருக்கும் என்ற அவர், இதன் மூலம் திமுக அரசை தூக்கி அடிப்போம் என தெரிவித்துள்ளார். அத்துடன், வரும் 12-ம் தேதிக்குள் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட வேண்டும் எனவும் கெடு விதித்துள்ளார்.

News December 9, 2025

செங்கோட்டையனின் அண்ணன் மகன் அதிமுகவில் இணைகிறார்

image

செங்கோட்டையனின் சொந்த அண்ணன் மகன் கே.கே.செல்வம் திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஈரோடு திமுக வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளராக இருந்த அவர் கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக திமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. இதனையடுத்து, அவர் மீண்டும் அதிமுகவில் இணைகிறேன் என்று அறிவித்துள்ளார். கோபியில் செங்கோட்டையனுக்கு எதிராக செல்வத்தை அதிமுக களமிறக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News December 9, 2025

மூட்டு வலியை விரட்டும் அற்புத மூலிகை எண்ணெய்

image

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி, ➤ஆமணக்கு எண்ணெய் மூட்டு & தசை வலியைப் போக்க சிறந்தது. மேலும், முகப்பரு, தோல் வறட்சி, முடி வளர்ச்சி போன்ற பிரச்னைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது. ➤கண்கள் சிவந்திருந்தால், இந்த எண்ணெய்யை 2 துளி கண்களில் விட குணமாகும். ➤ஆமணக்கு இலையுடன் கீழாநெல்லி இலையை சேர்த்து அரைத்து, எலுமிச்சம்பழம் அளவிற்கு காலையில் சாப்பிட்டு வந்தால், மஞ்சள் காமாலை குணமாகும். SHARE.

error: Content is protected !!