News January 12, 2025

போன் தொலைந்தால்…இப்படி ஈசியா கண்டுபிடிக்கலாம்

image

ஆண்ட்ராய்ட் மொபைலில் Settingsல் Googleஐ கிளிக் செய்யுங்கள் *‘All Services’ அல்லது ‘Look for Find My Device’ என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும் *‘Use Find My Device’ ஆப்ஷனை ‘Switch on’ ஆகி இருப்பதை உறுதி செய்யுங்கள் *மற்றொரு போனின் பிரவுசரில் google.com/android/find என்ற லிங்கில் தொலைந்த போனில் லாக்-கின் செய்யப்பட்டுள்ள கூகுள் அக்கவுண்ட்டை கொடுத்தால் எளிதாக லொகேஷனை தெரிந்து கொள்ளலாம். SHARE IT..

Similar News

News December 8, 2025

வள்ளலார் பொன்மொழிகள்

image

*உண்மையை சொல் அது உனது மரியாதையை பாதுகாக்கும். *சோதனைகள் தான் ஒரு மனிதனுக்கு அவனை அறிமுகப்படுத்துகின்றன. *ஒரு விளக்கு இன்னொரு விளக்கை ஏற்றுவதன் மூலம் எதையும் இழந்து விடாது. அந்த இடத்தில் ஒளி 2 மடங்காகும். அது போல நாம் பிறருக்கு உதவுவதால், நாம் பெறும் இன்பம் 2 மடங்காகும். *உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்கு பதில் பசியில் இருப்போருக்கு வயிறார உணவு கொடுங்கள். அதுவே கடவுளுக்கு மகிழ்ச்சி கொடுக்கும்.

News December 8, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: செங்கோன்மை ▶குறள் எண்: 543 ▶குறள்: அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல். ▶பொருள்: ஓர் அரசின் செங்கோன்மைதான் அறவோர் நூல்களுக்கும் அறவழிச் செயல்களுக்கும் அடிப்படையாக அமையும்.

News December 8, 2025

ஹஜ் யாத்ரீகர்களுக்கு புதிய விதிகள் அறிமுகம்

image

ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் யாத்ரீகர்களுக்கு வழங்கப்படும், ‘நுஸுக்’ அட்டைகளில் புதிய விதிகளை சவுதி ஹஜ் அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, உள்நாட்டு யாத்ரீகர்களுக்கு டிஜிட்டல் வடிவிலும், வெளிநாட்டு யாத்ரீகர்களுக்கு சவுதி வந்த உடன் அட்டை வடிவிலும் வழங்கப்படும். இதை, ஹஜ் மற்றும் உம்ரா சீசன் முழுவதும் யாத்ரீகர்கள் எப்போதும் உடன் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!