News January 12, 2025
80 மாணவிகளின் சட்டையை கழட்டி அனுப்பிய பிரின்சிபல்

ஜார்கண்டில் 80 மாணவிகளின் சட்டையை கழட்டி, தனியார் பள்ளியின் தலைமை ஆசிரியர் வீட்டிற்கு அனுப்பிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. தேர்வு முடிந்ததும், மாணவிகள் ‘Pen Day’ கொண்டாடியுள்ளனர். இதை கண்டித்து தண்டனை கொடுக்க, பிரின்சிபல் இப்படி நடந்து கொண்டிருக்கிறார். சட்டை இல்லாமல் வெறும் பிளேசருடன் வந்த மகள்களை பார்த்த பெற்றோர் அதிர்ச்சியடைந்து புகார் அளித்த நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 7, 2025
பள்ளிகள் 9 நாள்கள் விடுமுறை.. அரசு அறிவிப்பு

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு அரசுப் பள்ளிகளில் CBSE பாடத்திட்டம் நடத்தப்படும் நிலையில், 3-ம் பருவ தேர்வுகள் டிச.16-ல் தொடங்கி டிச.23 வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, டிச.24 முதல் ஜன.1 வரை பள்ளிகள் விடுமுறை என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் டிச.24 முதல் ஜன.4 வரை அரையாண்டு தேர்வு விடுமுறையாகும்.
News December 7, 2025
வானில் இருந்து விழுந்த மர்ம சிவப்பு தூண்கள்.. PHOTOS!

வானில் இருந்து ரெட் கலர் தூண்கள் விழுவதை போல நிகழ்ந்த சம்பவத்தின் போட்டோதான் ட்ரெண்டிங். ஏதோ ஏலியன் ஸ்பேஸ்ஷிப்போ என கற்பனையை உலாவ விட வேண்டாம். இது ஒருவகை மின்னல். Sprites எனப்படும் இவை இடி மின்னலுடன் பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 50-90 கிமீ உயரத்தில் தோன்றும். இத்தாலியில் நடந்த இந்த அதிசய வானிலை நிகழ்வின் போட்டோவை நீங்க மட்டும் பார்த்து ரசிக்காமல், நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
News December 7, 2025
ராமதாஸ் தரப்பால் வெல்லவே முடியாது: அன்புமணி தரப்பு

அன்புமணியை தலைவராக டெல்லி நீதிமன்றம் ஏற்கவில்லை என ராமதாஸ் தரப்பு சொல்வது வேடிக்கையாக இருப்பதாக அன்புமணி தரப்பு வழக்கறிஞர் பாலு விமர்சித்துள்ளார். பாமக விவகாரத்தில் எந்த நீதிமன்றத்திற்கு சென்றாலும் ராமதாஸ் தரப்பால் வெல்லவே முடியாது. 2026 வரை அன்புமணிக்கு தலைவர் பதவிக்காலம் இருப்பதை ECI அங்கீகரித்துள்ளது. இதை டெல்லி ஐகோர்ட் நிராகரிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.


