News January 11, 2025
இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 64 பேர்

கேரளா பத்தினம்திட்டா பள்ளியில், ஒரு மாணவியிடம் (18) கடந்த 4 ஆண்டுகளில் 64 பேர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர். விளையாட்டு வீராங்கனையான அவரிடம் கோச்சுகள், மாணவர்கள், உள்ளுர் ஆண்கள் தவறாக நடந்துள்ளனர். பள்ளியில் நடைபெற்ற கவுன்சலிங்கின் போது மாணவி இதை தெரிவித்தார். இதையடுத்து POCSO-வில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். படிப்பறிவில் நம்.1 கேரளாவிலும் இதுதான் நிலையா?
Similar News
News December 9, 2025
அரசு பஸ்சில் பயணம் செய்த பெண்ணிடம் ரூ. 5 லட்சம் திருட்டு

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்தவர் சம்பத்குமார் மனைவி ஹேமலதா(24). இவர் தனது நகையை கனரா வங்கியில் அடகு வைத்து ரூ. 8.20 லட்சத்துடன் மதுரை கல்லுப்பட்டியை நோக்கி அரசு பஸ்ஸில் நேற்று சென்று கொண்டு இருந்தார். கொட்டாம்பட்டி அருகே பஸ் வந்த போது அவர் வைத்திருந்த பணத்தில் ரூ.5 லட்சம் காணாமல் போயிருந்தது. இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கொட்டாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 9, 2025
நாதகவில் இருந்து விலகல்.. புதிய கட்சி உதயம்

நாதக ராமநாதபுரம் தொகுதி நிர்வாகிகள் அனைவரும் கூண்டோடு அக்கட்சியில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கியுள்ளனர். மாவட்டச் செயலாளராக இருந்த கண்.இளங்கோ தலைமையில் ‘மேதகு நாம் தமிழர் கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கப்பட்டுள்ளது. திராவிட கட்சிகளுக்கு எதிராக நாதக செயல்படவில்லை என குற்றஞ்சாட்டிய கண்.இளங்கோ, வெறுமனே பேசினால் மட்டுமே ஆட்சியை பிடித்துவிடலாம் என நாதக தலைமை நம்புகிறது என சாடியுள்ளார்.
News December 9, 2025
நார்த்தங்காயின் நன்மைகள்

நார்த்தங்காயில் இரும்பு சத்து, கால்சியம், வைட்டமின் சி & பி அதிகம் நிறைந்துள்ளது. நார்த்தங்காய் ஊறுகாய் போட மட்டுமல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பல்வேறு நன்மைகளை தருகின்றன. அவை என்னென்ன நன்மைகள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.


