News August 5, 2025

9 மீனவர்களுக்கு 19ஆம் தேதி வரை இலங்கையில் காவல் நீட்டிபு

image

பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஒரு நாட்டுப்படகையும் அதிலிருந்த 9 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த மாதம் 29ஆம் தேதி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மீனவர்களின் வழக்கு இன்று புத்தளம் நீதிமன்ற நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, 9 பேருக்கும் வரும் 19ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீடித்து உத்தரவிட்டார்.

Similar News

News December 9, 2025

ராமநாதபுரத்தில் ஒரே நாளில் 491 பேர் கைது

image

ராமநாதபுரத்தில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் நேற்று யூனியன் அலுவலகம் முன்பு வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர் .நீர்த்தேக்கத்தொட்டி சுத்தம் செய்வதற்கு கிளீனி ங் அலவனஸ் ரூ.300 வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடத்திய நிலையில் 191 பேரை போலீசார் கைது செய்தனர்.அதே போல் முதுகுளத்துாரில் மறியல் போரட்டத்தில் ஈடுபட்ட 300 பேரையும் கைது செய்தனர்.

News December 9, 2025

ராமநாதபுரம்: 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் கவனத்திற்கு

image

ராமநாதபுரம், பரமக்குடி, ராமேஸ்வரம், முதுகுளத்தூர், கடலாடி, திருவாடனை ஆகிய வட்டங்களில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் இன்று (டிச.09, செவ்வாய்க்கிழமை) முதல் 18 வயது பூர்த்தியடைந்தவர்களின் வாக்காளர் சேர்க்கை விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. ஆதார் கார்டு, புகைப்படம், பிறப்புச் சான்றிதழ், பள்ளி TC ஆகியற்றுடன் பள்ளிகளில் உள்ள BLO அதிகாரிகளிடம் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 9, 2025

கூடுதல் உரம் விற்றால் உரிமம் ரத்து; புகார் தெரிவிக்க எண்கள் வெளியீடு

image

யூரியாவுடன் கூடுதல் உரங்கள் வாங்க கட்டாயப்படுத்தினால் உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண்துறை எச்சரித்துள்ளது.
ராமநாதபுரம் – 9952842093, திருப்புல்லாணி/உச்சிப்புளி 7904026400,
திருவாடானை 9384152659, ஆர்.எஸ்.மங்கலம் 9524520909, பரமக்குடி 8072133657
நயினார் கோவில் 9443090564, போகலூர் 9345897745, கமுதி 7373173545
முதுகுளத்தூர் 9443642248, கடலாடி 6382740475 புகார் தெரிவிக்கலாம்.

error: Content is protected !!