News October 12, 2025

மனநிறைவுக்காக 1,388 கிமீ நடந்த 73 வயது முதியவர்

image

குஜராத்தை சேர்ந்த 73 வயதான ஜெயந்திலால் ஹரிஜ்வன்தாஸ் படேல் என்பவர் சுமார் 1,388 கிலோ மீட்டர் தூரம் நடைபயணமாக உத்தர பிரதேசத்தின் அயோத்திக்கு சென்றுள்ளார். ராமர் மீதான அதீத பக்தியில் நடைபயணத்தை தொடங்கி 40 நாள்களில் அதை நிறைவு செய்துள்ளார். இந்நிலையில், அயோத்தி ராமர் கோவிலில் தரிசனம் செய்த அவர், தற்போது மனநிறைவு பெற்றுள்ளதாக கூறியுள்ளார்.

Similar News

News December 15, 2025

BREAKING: வங்கிக் கணக்கில் ₹1,000 வந்தது

image

மகளிர் உரிமைத்தொகை ₹1,000 சற்றுமுன் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. கடந்த 12-ம் தேதி ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ நிகழ்ச்சியில் 2-ம் கட்ட திட்ட விரிவாக்கத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 17 லட்சம் மகளிருக்கு ₹1,000 செலுத்தப்பட்டது. இந்நிலையில், ஏற்கெனவே பயன்பெற்று வரும் 1.13 கோடி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் 28-வது தவணை தற்போது வரவு வைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு வந்துவிட்டதா?

News December 15, 2025

இன்சூரன்ஸால் இந்தியாவில் விளையாடாத மெஸ்ஸி!

image

இந்தியா வந்துள்ள மெஸ்ஸி, எந்த கால்பந்து போட்டியிலும் விளையாடாததற்கு ஒரு இன்சூரன்ஸ் பாலிசிதான் காரணம். மெஸ்ஸி தனது இடது காலை சுமார் ₹8,000 கோடிக்கு இன்சூர் செய்துள்ளார். அர்ஜெண்டினா அல்லது இன்டர் மியாமி அணிகளுக்காக விளையாடும் போது காயமடைந்தால் மட்டுமே அந்த பாலிசி கவராகும். ஆனால், Exhibitional போட்டிகளில் காயம் அடைந்தால், பாலிசி கவராகாது என்பதால், மெஸ்ஸி இந்தியாவில் விளையாடவில்லை என கூறப்படுகிறது.

News December 15, 2025

இந்தியாவுக்கு பஹல்காம்.. ஆஸி.,க்கு போண்டி

image

சந்தோஷத்தை தந்த சுற்றுலா தலங்களான இந்தியாவின் <<16186680>>பஹல்காமும்<<>>, ஆஸி.,-யின் சிட்னி <<18568504>>போண்டி கடற்கரையும்<<>> பயங்கரவாதத்தின் கொடூரத்தால் துயரத்தின் தடங்களாக மாறியுள்ளன. இரு இடங்களிலும் மதம் மற்றும் இனத்தை அடிப்படையாக கொண்டே தீவிரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன. பஹல்காமில் 26 உயிர்களும், சிட்னியில் 15 உயிர்களும் பறிபோன நிலையில், இரண்டிலும் பயங்கரவாத அச்சுறுத்தலில் பாதிக்கப்பட்டவர்கள் அமைதியான பொதுமக்களே. So sad!

error: Content is protected !!