News September 29, 2025
அரசில் 7,267 பணியிடங்கள்: ₹35,400 முதல் சம்பளம்!

மத்திய அரசு பள்ளிகளில் (EMRS) உள்ள 7,267 ஆசிரியர் & ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. B.Ed முடித்து 55 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆசிரியரல்லாதவர்களுக்கு ₹18,000- ₹1,12,400 வரையும், ஆசிரியர்களுக்கு ₹35,400 – ₹2,09,200 வரையும் சம்பளம் வழங்கப்படும். வரும் அக்டோபர் 23-ம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம். முழு தகவலுக்கு <
Similar News
News December 7, 2025
துப்பாக்கிச்சூடு: குழந்தைகள் உள்பட 11 பேர் பலி

தெ.ஆப்பிரிக்காவின் நிர்வாக தலைநகரான பிரிட்டோரியா அருகே உள்ள சால்ஸ்வில்லே நகரில், மதுபான விடுதியில் நுழைந்த கும்பல் ஒன்று சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில், 3 வயது, 12 வயது என 3 குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்த நிலையில், 14 பேர் காயமடைந்துள்ளனர். சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்து வரும் போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
News December 7, 2025
நடிகை சோனாரிகாவிற்கு குழந்தை பிறந்தது ❤️❤️❤️

கெளதம் கார்த்திக்கின் ‘இந்திரஜித்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சோனாரிகா படோரியா. இவருக்கு, தொழிலதிபர் விகாஸ் பரஷார் உடன் 2024-ல் திருமணம் முடிந்தது. இந்நிலையில், இத்தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. மழலை வாசமிக்க பிஞ்சு கால் விரல்களை பிடித்தவாறு சோனாரிகா வெளியிட்ட போட்டோவுக்கு லைக்குகள் குவிகின்றன. மேலும், திரை பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.
News December 7, 2025
லோகியின் அடுத்த குக்கிங்.. ஆமிர் கான் அப்டேட்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஆமிர் கான் நடிக்கவுள்ளதாக ஏற்கெனவே கூறப்பட்டது. இந்நிலையில், தான் லோகேஷுடன் பேசி வருவதை ஆமிர் உறுதி செய்துள்ளார். ஒரு மாதத்திற்கு முன்பு லோகியுடன் பேசியதாகவும், விரைவில் மும்பையில் சந்தித்து பேசவுள்ளதாகவும் கூறியுள்ளார். தற்போது வரை தற்காலிகமாக லோகியின் டைரக்ஷனில் கமிட்டாகியுள்ளதாக ஆமிர் ஹிண்ட் கொடுத்துள்ளார். லோகேஷ் – ஆமிர் காம்போ எப்படி இருக்கும்?


