News August 6, 2024
7 மாதமாக பயிர் காப்பீடு வரவில்லை – கனிமொழி

2023 டிசம்பரில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தில் பயிர்கள் சேதமடைந்தன.அதில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு 7 மாதமாகியும் காப்பீடு தொகை வரவில்லை. பயிர் காப்பீடு செய்தவர்களுக்கு இழப்பீடு செய்யும் முறையை எளிமைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாவட்ட அளவில் வறட்சியோ, வெள்ளமோ ஏற்பட்டால் இழப்பீடு வழங்க விதியை தளர்க்க வேண்டும் என மக்களவையில் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News January 17, 2026
தூத்துக்குடி: உங்க நீதிமன்ற CASE பற்றி ஈசியா தெரிஞ்சிக்கலாம்…

தூத்துக்குடி மக்களே நீங்கள் புகார் அளித்த பிரச்சனைகள் வழக்குகளாகி பல வருடங்களாகி இருக்கும். இப்போது அந்த வழக்குகளின் நிலை தெரியமால் இருப்பீர்கள். இதற்காக கோர்ட் வாசலையே சுற்றுகிறீர்களா? இதை தீர்க்க ஒரு வழி உண்டு. உங்க போன்ல ECOURTS <இடைவெளி> <உங்கள் CNR எண்> என்ற வடிவில் 9766899899 எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புங்க. உங்கள் வழக்கு நிலை உடனே உங்க Phoneல் வரும் இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE IT
News January 17, 2026
தூத்துக்குடி: தொழிலாளி அடித்துக் கொலை

சாயர்புரம் அருகே கட்டாலங்குளம் பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவருக்கு சொந்தமான கோழி பண்ணையில் வில்லியம் என்பவர் வேலைபார்த்து வந்துள்ளார். அங்கு அவருடன் வேலைபார்த்து வந்த சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடன் மது அருந்தி உள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் வில்லியம்மை சுப்பிரமணியன் அடித்து கொலை செய்து சாக்கு முட்டையில் கட்டிவைத்துள்ளார். இத்தகவல் அறிந்த போலீசார் சுப்பிரமணியனை நேற்று கைது செய்தனர்.
News January 17, 2026
தூத்துக்குடி இன்று இரவு ஹலோ போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.


