News May 13, 2024
7 மணி நேர தூக்கம் அவசியம்

மனிதர்கள் ஒவ்வொருவரும் குறைந்தது 7 மணி நேரம் தூங்க வேண்டும், இல்லையெனில் பல்வேறு நோய்கள் ஏற்படும் எனக் கூறுகிறது ஒரு ஆய்வு. அவ்வாறு 7 மணி நேரம் தூங்குவதால் கிடைக்கும் பலனை தெரிந்து கொள்வோம். *உடல் பருமனை கட்டுக்குள் வைத்திருக்கலாம் *நினைவு திறன் நன்றாக இருக்கும் *இதயம் நன்றாக இருக்கும் *சர்க்கரை அளவு சீராக இருக்கும் *மன அழுத்தம் நேரிடாது *நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
Similar News
News December 16, 2025
யாரையெல்லாம் CSK வாங்கணும்?

IPL மினி ஏலத்தில் CSK அணி ₹43.4 கோடி வரை செலவழிக்க முடியும். மாத்ரே, சாம்சன், ருதுராஜ், துபே, பிரேவிஸ் என டாப்-5 பேட்டிங் செட் ஆகிவிட்டதால், ஃபினிஷிங் ரோலில் 2 வீரர்களை CSK வாங்க வேண்டி உள்ளது. அதேபோல நாதன் எல்லிஸிற்கு Backup ஆக ஒரு டெத் பவுலரை எடுப்பது அவசியமாகும். ஜடேஜாவின் இடத்தை நிரப்புவதற்கு, டாப் ஃபார்மில் உள்ள இந்தியன் ஆல்-ரவுண்டரை எடுப்பது CSK-விற்கு சவாலாக இருக்கலாம். CSK யாரை வாங்கணும்?
News December 16, 2025
தங்கம் விலை தாறுமாறாக மாறியது

தங்கத்தின் விலை இதுவரை எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்தாண்டில் புதிய உச்சம் தொட்டுள்ளது. 2025 ஜன.1-ம் தேதி 22 கேரட் தங்கம் 1 சவரன் ₹57,200 மட்டுமே. ஆனால், இன்றைய தேதியில் அதன் விலை ₹1,00,120. 1 ஆண்டு நிறைவடைவதற்குள் சவரன் ₹42,920 அதிகரித்திருப்பது சாமானிய மக்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. வருங்காலத்திலும் <<18573167>>தங்கம் விலை<<>> ஏறுமுகத்தில் இருக்கும் என்பதே நிபுணர்களின் கணிப்பாக உள்ளது.
News December 16, 2025
இந்தியாவின் வலிமையை உலகிற்கு உணர்த்திய நாள்!

1971-ல் நடந்த இந்தியா – பாகிஸ்தான் போரில் இந்தியா வெற்றி பெற்றதன் அடையாளமாக, ஒவ்வொரு ஆண்டும் டிச.16-ம் தேதி விஜய் திவாஸ் தினம் (வெற்றி தினம்) அனுசரிக்கப்படுகிறது. இந்திய ராணுவத்தின் தாக்குதலால் பாக்., ராணுவ தளபதி ஜெனரல் ஆமிர் அப்துல்லா கானும், அவரது 93,000 படைவீரர்களும் சரணடைந்தனர். இந்த போர் கிழக்கு பாகிஸ்தானாக இருந்த பகுதியை, தற்போதைய வங்கதேசமாக உருவாக வழிவகுத்தது.


