News October 10, 2024

7ஆம் நூற்றாண்டின் முருகர் சிலை கண்டெடுப்பு

image

ஒழுக்கோல்பட்டு கிராமத்தில் உள்ள லட்சுமியம்மன் கோவில் அருகே, பழமை வாய்ந்த சிலை சேதமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இச்சிலை, தலை கூம்பு வடிவில் உள்ளது. கரந்த மகுட கவசம் மற்றும் முகம், காது ஆகிய பகுதிகளில், ஆபரணங்கள் அணியப்பட்டு உள்ளன. இது, 7ஆம் நூற்றாண்டின் முருகர் சிலை என வரலாற்று மத்திய தொல்லியல் துறை உதவி ஆய்வாளர் ரமேஷ், கல்வெட்டு ஆய்வாளர் நாகராஜன் ஆகியோர் உறுதிப்படுத்தினர்.

Similar News

News November 15, 2025

காஞ்சி: நடத்துநரை பேருந்தில் இருந்து தள்ளிய மாணவர்கள்!

image

காஞ்சி, மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த பூசாமி MTC நடத்துநர். இவர், அகரம் -தாம்பரம் பேருந்தில், நடத்துநராக உள்ளார். ஆதிநகர் அருகே வந்தபோது, பள்ளி மாணவர்கள் சிலர், பேருந்து படிக்கட்டு & ஜன்னல் கம்பிகளை பிடித்து தொங்கியபடி பயணம் செய்ததை பார்த்த ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியவுடன், பூசாமி மாணவர்களிடம் பேச, அவர்கள் இவரை பேருந்தில் இருந்து தள்ளிவிட்டு அங்கிருந்து சென்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

News November 15, 2025

காஞ்சி: கோவில் அருகே போதைப்பொருள் விற்பனை!

image

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் பின்புறம் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு பிள்ளையார்பாளையம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவரை சிவகாஞ்சி போலீசார் நேற்று (நவ.14) கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 4.500 கிலோ எடையிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

News November 15, 2025

காஞ்சிபுரம் மாவட்ட இரவு நேர ரோந்து பணி

image

காஞ்சிபுரம் மாவட்டம் இன்று இரவு ரோந்து பார்க்கும் அதிகாரிகள் மற்றும் காவல் நிலையங்கள் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்கு வசதியாக சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி மற்றும் குற்ற செயல்களோ அல்லது சந்தேக நிலை ஏற்பட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் சென்று பெயர் பட்டியலில் உள்ள அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் அல்லது தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ளவும்

error: Content is protected !!