News March 29, 2024
நீதிபதிக்கு கடிதம் எழுதிய 600 வழக்குரைஞர்கள்

நீதிமன்றங்களுக்கு அழுத்தம் தரும் வகையில், ஒரு சில குறிப்பிட்ட பிரிவினர் பொய் பிரசாரம் செய்துவருவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர். 600 வழக்குரைஞர்கள் கூட்டாக எழுதிய அந்த கடிதத்தில், “மக்களவைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், நீதிமன்றங்களுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன் வைப்பவர்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
Similar News
News January 19, 2026
ராம்நாடு: பெண் காவலர்களை வீடியோ எடுத்த S.S.I கைது

பரமக்குடியில் இமானுவேல் சேகரன் மணிமண்டபத்தை திறந்து வைக்க நேற்று முந்தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரமக்குடிக்கு வருகை தந்தார். அப்போது முதல்வரின் பாதுகாப்புக்கு வந்த பெண் காவலர்களை கழிவறையில் செல்போனில் வீடியோ எடுத்த பரமக்குடி நகர் சிறப்பு சார்பு ஆய்வாளர் (SSI) முத்துப்பாண்டியை பெண் காவலர்களின் புகாரின் பேரில் பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
News January 19, 2026
ஒரே கோயிலில் 3 ரூபங்களில் காட்சி தரும் சிவன்

பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர், சட்டைநாதராக என 3 ரூபங்களில் சீர்காழி சட்டைநாத சுவாமி கோயிலில் ஈசன் காட்சியளிக்கிறார். 3 அடுக்குகளைக் கொண்ட குன்றுக்கோயிலாக இக்கோயில் விளங்குகிறது. கீழ் தளத்தில் பிரம்மபுரீஸ்வரர், திருநிலை நாயகி அருள்பாலிக்கின்றனர். இது லிங்க மூர்த்தம் எனப்படும். நடு அடுக்கில், தோணியப்பர் உள்ளார். 3-வது தளத்தில் சட்டநாதராக இறைவன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
News January 19, 2026
காரைக்காலில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

புதுவையின் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று(ஜன.19) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில் கடந்த 3 நாள்களாக நடந்த மலர் கண்காட்சி, கார்னிவல் விழாவின் நிறைவு நாளையொட்டி இந்த விடுமுறையானது விடப்பட்டுள்ளது.


