News June 18, 2024
5 நாட்களில் ரூ 1.64 லட்சம் அபராதம் வசூல்!

மதுரை கோட்டத்தில் வைகை, குருவாயூர், பாலக்காடு – பழனி – சென்னை, தூத்துக்குடி – மைசூர் ரயில்களில் கடந்த 5 நாட்களாக பயணச்சீட்டு பரிசோதகர்கள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில், உரிய பயணச்சீட்டு இல்லாமல் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில் பயணம் செய்த பயணிகளிடம் இருந்து அபராதமாக ரூ.1,64,415 வசூல் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது.
Similar News
News January 21, 2026
மதுரை: பைக் மோதி தூக்கி வீசப்பட்டவர் உயிரிழப்பு..

செக்கானூரணியை சேர்ந்தவர் மொக்கை மாயன் (73). தேனி – மதுரை ரோட்டில் பசும்பொன் நகர் அருகே சாலையோரம் நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக அதி வேகமாக வந்த புல்லட் பைக் இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். செக்கானூரணி போலீசார் டூ வீலரை ஒட்டி வந்த வடபழஞ்சியை சேர்ந்த மணிகண்டன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

JUST IN மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றம்.!

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோவில் தெப்பத் திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜன.26 அன்று சைவ சமய ஸ்தாபித வரலாற்று தீவையும், ஜன.30 ல் தெப்பம் முட்டு தள்ளுதல் நிகழ்வு நடைபெறும். அதனைத் தொடர்ந்து பிப்.1 ஆம் தேதி, மீனாட்சி சுந்தரேஸ்வரரின் பிரியா-விடையுடன் வண்டியூர் தெப்பக்குளத்தில் தெப்ப திருவிழா கோலாகலமாக நடைபெறும்.