News August 6, 2024
49 பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்படும் என அறிவிப்பு

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த முன்னேற்பாடு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 49 பகுதிகள் மழையால் அதிகம் பாதிக்கப்படும் என கண்டறியப்பட்டுள்ளது. அங்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆட்சியர் அறிவுறுத்தினார்.
Similar News
News January 14, 2026
ராணிப்பேட்டை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொங்கல் கலைவிழா வரும் ஜனவரி 15, 16 தேதிகளில் நடைபெற உள்ளது. முத்துக்கடை பேருந்து நிலையம் மாலை 6 மணி முதல் 8 மணி வரை நடைபெறும் இந்நிகழ்வில் பரதநாட்டியம் மற்றும் நாட்டுப்புறக் கலைகள் இடம்பெறும். இதில் 100-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்று காலை நிகழ்ச்சிகள் நடத்த உள்ளனர். இதில் அனைத்து பொதுமக்களும் வருகை தந்து சிறப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
News January 14, 2026
ராணிப்பேட்டை: பூட்டிய வீட்டில் வாலிபர் பிணம்

நந்தியாலம் அடுத்த குறிஞ்சி நகரை சேர்ந்தவர் விக்னேஷ் (28). இவர் இன்று (ஜன.14) பூட்டப்பட்டிருந்த வீட்டில் தூக்கில் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து அப்பகுதி மக்கள் இன்று இரத்தினகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 14, 2026
முதலமைச்சரை சந்தித்த ராணிப்பேட்டை அமைச்சர்

தமிழர் திருநாள் பொங்கலை முன்னிட்டு, திமுக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ராணிப்பேட்டை ஆர். காந்தி இன்று (ஜன.14) நேரில் சந்தித்து பொங்கல் வாழ்த்து பெற்றார். இந்நிகழ்வில் உடன் ராணிப்பேட்டை மாவட்ட அவைத்தலைவர் சுந்தரமூர்த்தி கலந்து கொண்டார்.


