News August 6, 2024
47 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

திருச்சி மத்திய மண்டலத்தில் பணியாற்றிய காவல் அதிகாரிகள், கடந்த நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். பின்னர் படிப்படியாக அவர்கள் மீண்டும் அவரவர் பகுதிகளுக்கு பணி அமர்த்தப்பட்டனர். அந்தவகையில் திருச்சி புறநகர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய திருச்சி சரகத்தில் 47 காவல் அதிகாரிகளை திருச்சி மண்டலத்தில் பணியிட மாற்றம் செய்து டிஐஜி உத்தரவிட்டுள்ளார். SHAREIT
Similar News
News January 21, 2026
திருச்சி: இன்று மின்தடை இல்லை – அறிவிப்பு வாபஸ்

தொட்டியம் பகுதியில் இன்று (ஜன.21) மின் நிறுத்தம் செய்யப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தவிர்க்க முடியாத காரணமாக, மின்தடை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள புதிய தகவலின்படி, தொட்டியம் பகுதியில் இன்று மின் நிறுத்தம் கிடையாது என்றும், வழக்கம் போல் மின் விநியோகம் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 21, 2026
திருச்சி: படைவீரர்கள் சட்ட ஆலோசனை முகாம் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்கள் சார்ந்தவர்களுக்கு சட்டரீதியாக ஏற்படும் பிரச்சனைகளுக்கு சட்ட ஆலோசனை வழங்கும் வகையில், திருச்சி மாவட்ட முன்னாள் படைவீரர் நல துணை இயக்குனர் அலுவலகத்தில் வாரம்தோறும் புதன்கிழமையன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் முன்னாள் படைவீரர்கள் கலந்து கொண்டு, சட்ட ஆலோசனைகளை பெற்று பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.