News August 4, 2024
400 கடன், வேலைவாய்ப்பு ஆஃப்களுக்கு தடை

பயனாளர்களை துன்புறுத்தியதற்காகவும், நிதி மோசடியில் ஈடுபட்டதற்காகவும் சுமார் 400 ஆன்லைன் கடன் மற்றும் வேலைவாய்ப்பு நிறுவன ஆஃப்களை கார்ப்பரேட் விவகார அமைச்சகம் தடை செய்துள்ளது. இந்த செயலிகள் தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட 17 மாநிலங்களில் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேலும், 30-40 சீன நிறுவனங்கள் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 600 செயலிகள் சோதிக்கப்பட்டுள்ளன.
Similar News
News January 20, 2026
திண்டுக்கல்: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். திண்டுக்கல் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0451-2460107, தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441, Toll Free -1800 4252 441, சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126, உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. (ஷேர் பண்ணுங்க)
News January 20, 2026
கவர்னர் உரையே இனி இருக்காதா?

சட்டப்பேரவையில் இருந்து 4-வது ஆண்டாக கவர்னர் வெளியேறியது பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்நிலையில், ஆண்டின் தொடக்கத்தில் கவர்னர் உரை வாசிப்பு என்ற நடைமுறையை நீக்க அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய முயற்சி எடுக்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்தியா முழுவதும் இது அமலுக்கு வர வலியுறுத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.
News January 20, 2026
உள்கட்சி அதிருப்தி.. செங்கோட்டையனுக்கு அதிர்ச்சி

தவெகவில் புஸ்ஸி ஆனந்த் அளவிற்கு முக்கியத்துவம் வழங்காததால் செங்கோட்டையன் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. தவெக பிரசார குழுவில் KAS-க்கு 3-ம் இடம் வழங்கப்பட்டிருப்பது, தனது தொகுதி மா.செ.விடம் பேச ஆனந்தின் அனுமதி பெறவேண்டிய நிலை, CBI விவகாரத்தில் கருத்தை கேட்காதது, தான் அழைத்து வந்தவர்களுக்கு பதவிகள் வழங்கவில்லை என பல விஷயங்களில் KAS அதிருப்தியில் இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.


