News June 18, 2024

4 தமிழக மீனவர்களுக்கு சிறை – இலங்கை நீதிமன்றம்

image

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக்கூறி, புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் மீனவர்களை விசாரணை செய்த நீதிபதி, ஜூலை 2 ஆம் தேதி வரை சிறைக் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதனடிப்படையில், 4 தமிழக மீனவர்களையும் இலங்கை போலீஸார்  யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

Similar News

News January 21, 2026

இராமநாதபுரம் ஜன.23 மிஸ் பண்ணிடாதீங்க..

image

இராமநாதபுரம் மாவட்டம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் (ஜன, 23) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இராமநாதபுரத்தில் நடைபெற உள்ளது. 18 முதல் 40 வயது வரை உள்ள, தகுதி வாய்ந்த நபர்கள் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 21, 2026

இராமநாதபுரத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

image

இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆயுதப்படை மைதானத்தில் நாட்டின் 77-வது குடியரசு தின விழா ஜன.15 அன்று கொண்டாடபட உள்ளது. இதையொட்டி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தை தயார் செய்யும் பணி நேற்று நடைபெற்றது. தொடர்ந்து விருந்தினர்கள் வந்து செல்வவது, கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான பணிகள் நடைபெற உள்ளன. இதற்காக மைதானத்தை தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

News January 21, 2026

BREAKING: 7 ராமேஸ்வர மீனவர்கள் சிறைபிடிப்பு!

image

ராமேஸ்வரம் கடலில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றுள்ளனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 7 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை சுற்றி வளைத்தது. இலங்கை கடற்படை. விசைப்படகுடன் மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை, நடுக்கடலில் விசாரணை நடத்தி வருகிறது.

error: Content is protected !!