News August 19, 2024
4 சத்துணவு கூடங்களுக்கு ISO தரச்சான்று

மதுரை மாவட்டத்தில் மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் அரசு உயர்நிலைப்பள்ளி, மாயாண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளி, அரும்பனூர் ஒன்றிய துவக்கப்பள்ளி, மதுரை கோரிப்பாளையம் மாநகராட்சி துவக்கப்பள்ளி ஆகிய நான்கு பள்ளிகளில் உள்ள சத்துணவு கூடங்களுக்கு ISO தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 100 சத்துணவு கூடங்களில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த 4 சத்துணவு கூடங்கள் தேர்வாகியுள்ளது பாராட்டை பெற்றுள்ளது.
Similar News
News January 16, 2026
மதுரை மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

மதுரை மாநகரில் இன்று (15.01.2026) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News January 15, 2026
BREAKING: அவனியாபுரம் ஜல்லிகட்டு; 44 பேர் சிகிச்சை

அவனியாபுரம் ஜல்லிகட்டு போட்டியில் 6வது சுற்று முடிவடைந்து 7வது சுற்று தொடங்கியுள்ளது. 6வது சுற்று முடிவில் 15 மாட்டின் உரிமையாளர்கள், 23 மாடுபிடிவீரர்கள், காயமடைந்துள்ளனர். 6வது சுற்று முடிவில் 44 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 5 நபர்கள் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
News January 15, 2026
மதுரை : செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.


