News May 14, 2024
36 வது இடத்தை பிடித்த கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பதினொன்றாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் அதிக அளவிலான தேர்ச்சி விகிதத்தை பெற்று கோயம்புத்தூர் மாவட்டம் முதலிடத்தை பெற்றுள்ள நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் 86 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சியுடன் 36 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது தொடர்ந்து மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
Similar News
News December 12, 2025
கள்ளக்குறிச்சி: பெண்ணுக்கு கொலை மிரட்டல்!

அரசம்பட்டை பகுதியைச் சேர்ந்த அய்யம்மாள், குபேந்திரன் இருவரும் பக்கத்து வீட்டுக்காரர்கள். இவர்களுக்கிடையே இடப் பிரச்சனை ஏற்பட்டு அடிக்கடி வாக்குவாதம் இருந்து வரும் நிலையில், அய்யம்மாள் வீட்டில் இருந்தபோது குபேந்திரன் தன்னுடைய இடத்தில் 2 அடி சேர்த்து கழிவறை கட்டியதாக கூறி, அய்யம்பாளை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
News December 12, 2025
கள்ளக்குறிச்சி கலெக்டர் பங்கேற்கிறார்…!

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகம் ஏற்பாட்டில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா இன்று(டிச.12) காலை 10 மணி அளவில் கச்சிராயபாளையம் சாலையில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற உள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் கலந்துகொள்கிறார்.
News December 12, 2025
கள்ளக்குறிச்சி: சிறுமியுடன் காதல் திருமணம்.. கணவருக்கு போக்சோ!

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியும், பிரியாணி கடையில் மேலாளராக பணியாற்றி வரும் வாலிபரும் ஒரு வருடமாக காதலித்து இரு வீட்டாரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட நிலையில், சிறுமி தற்போது 3 மாத கர்ப்பமாக உள்ளார். இது தொடர்பாக மகளிர் ஊர் நல அலுவலர் அளித்த புகாரின் பேரில், குழந்தை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


