News May 5, 2024
30 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது

பூந்தமல்லி வெளியூர் செல்லும் பேருந்து நிலையம் வழியாக கஞ்சா கடத்தி செல்வதாக பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு இன்று தகவல் கிடைத்தது. உதவி ஆய்வாளர் ராதா தலைமையில் போலீசார், ஈரோடு மாவட்டம், குமரபாளையம் பகுதியைச் சேர்ந்த கோகுல் (23), தேவரங்கபுரம் பகுதியைச் சேர்ந்த ராகுல் (21), நாமக்கல் பகுதியைச் சேர்ந்த சின்ராஜ் (23) ஆகிய 3 பேரை கைது செய்து 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Similar News
News December 9, 2025
திருவள்ளூர்:டிகிரி போதும், ரூ.85,000 சம்பளத்தில் அரசு வேலை!

திருவள்ளூர் மக்களே, மத்திய அரசின் கீழ் செயல்படும் ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி பணிக்கு 300 காலிப்பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். சம்பளமாக ரூ.50,925 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படும். 21-30 வயதுள்ளவர்கள் டிச.15ஆம் தேதிக்குள்<
News December 9, 2025
திருவள்ளூர் மக்களே.., 5 ஏக்கர் நிலம் வாங்க வாய்ப்பு!

பெண்கள் சொந்த நிலம் வாங்க தமிழக அரசு அறிமுகப்படுத்திய ‘நன்னிலம்’ திட்டத்தின் கீழ் 2.5- 5 ஏக்கர் வரையிலான நிலம் வாங்க 50% மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்ளிருக்கும் 18 – 56 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் TAHDCO அலுவலகத்தில் நேரடியாக சென்றோ (அ) <
News December 9, 2025
திருவள்ளூர்: லஞ்சம் கேட்டால், உடனே CALL!

திருவள்ளூர் மக்களே.., வருமானம், சாதி, குடிமை, பட்டா, சிட்டா மாற்றம் போன்ற பல்வேறு பணிகளுக்கு நாம் கண்டிப்பாக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு தாசில்தார் &அதிகாரிகள் தங்கள் பணிகளை முறையாக செய்யாமல் லஞ்சம் கேட்டால் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (04172-299200) புகாரளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


