News April 13, 2024
25 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத சாலை

செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சி 12வது வார்டுக்கு உட்பட்ட முருக்கங்காடு பகுதியில், 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் அடிப்படை தேவைகளான சாலை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட எவ்வித வசதிகளையும் நிறைவேற்றாமல், பல ஆண்டுகளாக இழுத்தடிக்கும், இடைக்கழிநாடு பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து லோக்சபா தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக,அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 14, 2025
8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபர் கைது

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் ரேடியல் சாலையில், உள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பூங்காவில் நேற்று முன்தினம் மாலை விளையாடி கொண்டிருந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபரை குடியிருப்பு வாசிகள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து பல்லாவரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் சர்புதீன் என்ற அந்த நபர் இதே போல் பல பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது
News November 14, 2025
செங்கல்பட்டு: தலையில் பாறாங்கல் விழுந்து பலி!

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அடுத்த வெளிக்காடு கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் தூர்வாரும் பணி நடைபெற்றது. கிணறு தோண்டும் பொழுது தொழிலாளி கோவிந்தராஜ்(53) தலையில் பாறாங்கல் விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அணைக்கட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். மேலும், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News November 14, 2025
செங்கல்பட்டு இரவு பணி காவலர்கள் விபரம்

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பாக நேற்று இரவு முதல் இன்று காலை வரை பணி செய்யும் காவல் அலுவலர்களின் தகவல் வெளியிடப்பட்டு வருகிறது. இதை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் பிரச்சனை அல்லது அவசரத் தேவை உள்ள நேரங்களில் மேற்கண்ட பட்டியலில் உள்ள காவல் நிலைய இரவு ரோந்து அலுவலர்களை உடனடியாக தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


