News August 6, 2024

நட்சத்திர ஓட்டலில் 24 பேர் எரித்துக்கொலை

image

வங்கதேசத்தில், 5 நட்சத்திர ஓட்டலுக்கு தீ வைக்கப்பட்டதில், 24 பேர் பலியான அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. வங்கதேச நாட்டில் பயங்கர கலவரம் மூண்டுள்ள நிலையில், அங்கு நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. குறிப்பாக, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தொடர்புடைய வீடுகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றை கலவரக்காரர்கள் சூறையாடி வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது. நேற்று ஷேக் ஹசீனாவின் இல்லம் சூறையாடப்பட்டது.

Similar News

News November 12, 2025

வெள்ளிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும்..

image

TN-ல் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நவ.14-ம் தேதி குழந்தைகள் தின விழா நிகழ்ச்சிகள் நடத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. Ex PM ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளையொட்டி ஆண்டுதோறும் நவ.14-ஐ மத்திய, மாநில அரசுகள் குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகின்றன. அந்த வகையில், மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கவும், சமூக முன்னேற்ற உறுதிமொழி எடுக்கவும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News November 12, 2025

BREAKING: கனமழை வெளுத்து வாங்கும்

image

தமிழ்நாட்டில் இன்று, நவ.17, 18 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என IMD எச்சரித்துள்ளது. இன்று குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும், 17-ம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும், 18-ம் தேதி ராமநாதபுரம், புதுகோட்டை உள்ளிட்ட 6 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்று அலர்ட் கொடுத்துள்ளது.

News November 12, 2025

CINEMA ROUNDUP: மீண்டும் நடிக்க தயாரான அமலா பால்

image

*முனீஷ்காந்தின் ‘மிடில் கிளாஸ்’ படத்தின் டிரெய்லர் வெளியானது *‘தேரே இஷ்க் மே’ படத்தின் புரமோஷனில் பிஸியாக உள்ள தனுஷ் *தனுஷின் அக்கா மகன் பவிஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் இன்று மாலை வெளியாகிறது *மீண்டும் படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறார் அமலாபால் *ரிலீஸுக்கு தயாராகிறது வெங்கட் பிரபுவின் பார்ட்டி * சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 15 மில்லியனை கடந்தது.

error: Content is protected !!