News November 21, 2024

பெருநகரங்களில் வீடுகளின் விலை 23% உயர்வு

image

டெல்லி, சென்னை, மும்பை, கொல்கத்தா உள்பட நாட்டின் முக்கிய 7 நகரங்களில் வீடுகளின் விலை சராசரியாக ₹1.23 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், பெருநகரங்களில் வீடுகளின் விலை 23% அதிகரித்துள்ளதாக ரியல் எஸ்டேட் ஆய்வு நிறுவனமான அனராக் தெரிவித்துள்ளது. கொரோனா பேரிடருக்குப் பிறகு அதிக மதிப்புள்ள வீடுகளின் மீது மக்களின் ஆர்வம் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Similar News

News November 8, 2025

பாஜக, விஜய்யை மறைமுகமாக சாடிய மு.க.ஸ்டாலின்

image

ஒரே நேரத்தில் பாஜக, விஜய்யை மறைமுகமாக மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திமுகவின் வரலாறு தெரியாத சிலர் நம்மை மிரட்டி பார்க்கிறார்கள் என்று பாஜகவையும், நேற்று கட்சி ஆரம்பித்த உடன் திமுகவை போல் வெற்றி பெறுவோம் என சிலர் பகல் கனவு காண்கிறார்கள் என்று விஜய்யையும் மறைமுகமாக அட்டாக் செய்துள்ளார். மேலும், திமுகவை போல் வெற்றிபெற வேண்டும் என்றால் திமுகவை போன்ற அறிவும், உழைப்பும் தேவை எனக் கூறினார்.

News November 8, 2025

மார்க் மீது புகார் கொடுத்த பக்கத்து வீட்டுக்காரர்கள்

image

உலகின் 4-வது பெரிய பணக்காரரான மார்க் சக்கர்பெர்க் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். என்ன காரணம் தெரியுமா? அரசு அனுமதி பெறாமல் மனைவியுடன் சேர்ந்து வீட்டிலேயே ‘Bicken Ben School’ என்ற பள்ளியை நடத்தி வந்ததாக அண்டை வீட்டார் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, நகர நிர்வாகம் பள்ளிக்கு தடை விதித்தது. இந்நிலையில், பள்ளி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதாக சக்கர்பெர்க் தரப்பு கூறுகிறது.

News November 8, 2025

BREAKING: டிச.1-ல் பார்லிமென்ட் கூடுகிறது

image

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் டிச.1 முதல் 19-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் ஜனநாயகத்தை வலுப்படுத்த ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டும் என அமைச்சர் கிரண் ரிஜிஜூ வலியுறுத்தியுள்ளார். இதனிடையே, தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த விவகாரத்தை பார்லிமென்ட்டில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

error: Content is protected !!