News January 9, 2025
22,466 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், டிஜிட்டல் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11 மற்றும் 12ஆம் வகுப்புப் பயிலும் மாணவ மாணவியருக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படுகிறது. கடந்த மூன்றாண்டுகளில் சுமார் 22,466 மாணவ மாணவியர் பயன் பெற்றுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 7, 2025
புதுச்சேரி: பொதுமக்கள் குறை தீர்வு முகாம் அறிவிப்பு

புதுச்சேரி டிஜிபி ஷாலினிசிங் உத்தரவின்படி புதுச்சேரிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில், (நவ.8) பொதுமக்கள் குறை தீர்வு முகாம் நடைபெறும் என புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் இன்று கலைவாணன் தெரிவித்துள்ளார். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளைப் புகார் மூலம் தெரிவிக்கலாம் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
News November 7, 2025
காரைக்கால்: மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு

புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் இருந்து காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு, பொது மக்களுக்கு வரும் சனிக்கிழமை (08.11.2025) அன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் புற்றுநோய் சம்பந்தமான சிறப்பு மருத்துவர்கள் குழு வருகை புரிய உள்ளதால், காரைக்கால் பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு, மாவட்ட நிர்வாகம் தங்களை கேட்டுக்கொள்கிறது.
News November 7, 2025
புதுவை: தபால் ஊழியர் தற்கொலை

புதுவை முதலியார்பேட்டை ராஜன் ஓய்வு பெற்ற தபால் ஊழியர், இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்கு பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமாகததால், வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தலையில் பாலித்தீன் கவரை சுற்றி, கயிற்றால் கழுத்தை இறுக்கி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.


