News November 15, 2025
21 நாள்கள் இத சாப்பிடுங்க.. அப்புறம் பாருங்க!

வாழைப்பழங்களிலேயே செவ்வாழைப்பழத்தில் தான் அவ்வளவு நன்மைகள் கொட்டிக்கிடக்கிறது. இதனை 21 நாள்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பல நன்மைகள் உண்டாகுமாம். கண் பார்வை மேம்படும், ஆண்மை குறைவு பிரச்னைகள் சரியாகும், பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சீராகும், நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம் என டாக்டர்கள் சொல்கின்றனர். தினமும் காலை உணவோடு செவ்வாழையை சாப்பிடுங்கள். அனைவருக்கும் SHARE THIS.
Similar News
News December 16, 2025
திமுகவில் இளைஞரணிக்கு 40 சீட்டு?

2026 தேர்தலில் 40 சீட்டை இளைஞரணிக்கு ஒதுக்க உதயநிதி விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. நேற்று முன்தினம் தி.மலையில் நடைபெற்ற வடக்கு மண்டல மாநாட்டிற்கு பிறகு இந்த முடிவுக்கு அவர் வந்துள்ளாராம். குறைந்தபட்சம் வருவாய் மாவட்டத்திற்கு ஒரு தொகுதியில்(38) நிச்சயம் களமிறங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம். சுமார் 5 லட்சம் நிர்வாகிகளுடன் திமுக இளைஞரணி இருப்பது அக்கட்சிக்கு பலமாக பார்க்கப்படுகிறது.
News December 16, 2025
21-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: IMD

தென் தமிழகம் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. இந்த மழை வரும் 21-ம் தேதி வரை நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளது. அதிகாலை வேளையில் லேசான பனிப்பொழிவு இருக்கும் என்றும், இன்று வெப்பநிலை இயல்பைவிட குறைவாக இருக்கும் எனவும் IMD கூறியுள்ளது.
News December 16, 2025
அதிமுகவில் இபிஎஸ்-க்கு இன்ப அதிர்ச்சி

அதிமுகவில், 349 மனுக்கள் EPS தங்களது தொகுதியில் போட்டியிட வேண்டும் என வழங்கப்பட்டுள்ளது அவருக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம். முதல் நாளில் மட்டும் 1,237 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைமை தெரிவித்துள்ளது. அதிமுகவில் உள்கட்சி பூசல் நிலவி வருவதாக கூறப்படும் நிலையில், EPS-க்கான இந்த வரவேற்பு அரசியல் களத்தில் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. உங்கள் கருத்து என்ன?


