News October 10, 2025

விரைவில் 2026 IPL ஏலம்

image

2026 IPL திருவிழா களைகட்ட தொடங்கியுள்ளது. முதல் படியாக, இதற்கான ஏலம் டிச.13 – 15-ல் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், வீரர்களை தக்கவைத்துக் கொள்வதற்கான காலக்கெடு நவ.15 உடன் முடிவடையும் என்றும் கூறப்படுகிறது. இம்முறை இந்தியாவிலேயே ஏலம் நடைபெறும் என்றும், இதுதொடர்பாக BCCI உடன் IPL அணி உரிமையாளர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிகிறது.

Similar News

News November 13, 2025

முடி வளர்ச்சிக்கு அற்புதமான எண்ணெய் இதுதான்

image

கடுகு எண்ணெயில் உள்ள வைட்டமின் இ, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் முடி வளர்ச்சிக்கு உதவும் என்கின்றனர். அத்துடன், மாசு, UV Rays-ஆல் ஏற்படும் சேதங்களிலிருந்து முடியை இது காக்கிறது. இதனால் காஸ்ட்லியான சீரம்களை வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. இந்த எண்ணெய்யில் பூஞ்சை எதிர்ப்பு சக்தியும் இருப்பதால் பொடுகு தொல்லையும் பறந்து போகும். வாரத்திற்கு 2 முறை இந்த எண்ணெய்யை தேய்த்து, தலைக்கு குளியுங்கள். SHARE.

News November 13, 2025

கூட்டணி அறிவிப்பு தற்போது இல்லை: பிரேமலதா

image

சட்டப்பேரவை தேர்தல் பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில், ஜன.9-ம் தேதிக்கு முன்பாகவோ, அல்லது அதன்பின்னரோ கூட்டணி பற்றி அறிவிக்கப்படும் என பிரேமலதா தெரிவித்துள்ளார். சூழ்நிலையை பொறுத்து அறிவிப்பு வெளியாகும் என்று கூறியுள்ள அவர், தேமுதிக இடம்பெறும் கூட்டணியே வெற்றிபெறும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

News November 13, 2025

7 ரூபாய் மட்டுமே.. தினமும் 2GB ரீசார்ஜ் ஆஃபர்

image

தினமும் ₹7 என்ற கணக்கில், ₹350 ரீசார்ஜ் திட்டத்தை BSNL அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம், 50 நாள்கள் வேலிடிட்டியுடன் தினமும் 2 GB டேட்டா, 100 SMS, அன்லிமிட்டெட் கால்ஸ் ஆகியவற்றை பெறலாம். இதுமட்டுமின்றி BiTV சேவை இலவசமாக வழங்கப்படுவதால் 350-க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்கள், பிரபலமான ஸ்ட்ரீமிங் ஆப்ஸை பார்த்து மகிழலாம். திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு BSNL இணையதளத்தை அணுகவும். SHARE IT

error: Content is protected !!