News November 25, 2025

2026 தேர்தலுக்கு மெகா பிளான் போடும் EPS

image

சட்டமன்ற தேர்தலுக்கு தகுதியான வேட்பாளர்களை பரிந்துரை செய்ய மாவட்ட செயலாளர்களுக்கு <<18382869>>EPS அறிவுறுத்தியுள்ளதாக<<>> தகவல் வெளியாகியுள்ளது. ஆன்லைன் மூலமாக மாவட்ட செயலாளர்களுடன் இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இதுபோன்ற பல முக்கிய அறிவுறுத்தல்களை EPS வழங்கியுள்ளார். அதேபோல், ஜனவரிக்குள் மெகா கூட்டணி அமைக்க மாபெரும் திட்டம் இருப்பதாகவும் நிர்வாகிகளுக்கு EPS உறுதி அளித்துள்ளார்.

Similar News

News January 17, 2026

தஞ்சை: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

image

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு தஞ்சை மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.

News January 17, 2026

நாளை தை அமாவாசை.. வீட்டில் கட்டாயம் இதை செய்யுங்க

image

*தர்ப்பணம் செய்த பின் வீட்டிற்கு திரும்பி சென்று முன்னோரின் படத்தை சுத்தம் செய்து, வடக்கு, கிழக்கு திசையில் வைத்து சந்தனம், குங்குமம் இட்டு துளசி மாலை சார்த்த வேண்டும். *முன்னோர்கள் பயன்படுத்திய பொருள்களை வைத்து குத்து விளக்கு ஏற்ற வேண்டும். *முன்னோர்களுக்கு பிடித்த இனிப்பு, காரம், பழ வகைகளை படைக்க வேண்டும். *வீட்டில் தெய்வம் சம்பந்தமான பூஜைகளை தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை ஒத்திவைக்க வேண்டும்.

News January 17, 2026

துடைத்து எறியப்பட்ட காங்., மறுபரிசோதனை செய்யுமா?

image

மகாராஷ்டிர உள்ளாட்சி தேர்தலில் மும்பை, புனே, நாக்பூர் உள்ளிட்ட 25 மாநகராட்சிகள், 207 நகராட்சிகளை பாஜக கூட்டணி கைப்பற்றியுள்ளது. ஆனால், காங்., படுதோல்வியடைந்து துடைத்து எறியப்பட்டிருகிறது. இத்தேர்தல் முடிவு, காங்., கட்சியினர் தங்களை மறுபரிசோதனை செய்வதற்கான முக்கிய காலகட்டத்தில் இருப்பதை வெளிக்காட்டுவதாகவும், மக்கள் பிரச்னையை கையில் எடுத்து களமாட வேண்டும் எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

error: Content is protected !!