News November 14, 2025
2026 தேர்தலில் களமிறங்க ரெடியாகும் பிரியா

விஜய் வருகை, சீமானின் வாக்கு சதவீதம் உயர்வு உள்ளிட்ட காரணங்களால் சென்னை, கோவை போன்ற நகரங்களில் இளம் வேட்பாளர்களை களமிறக்க வேண்டும் என்ற கருத்து திமுகவுக்குள் வலுவாக இருக்கிறதாம். இந்த சூழலில், சென்னை மேயராக இருக்கும் பிரியா, சேகர்பாபு வாயிலாக திமுக தலைமையிடம் எம்எல்ஏ சீட் கேட்டு வருகிறாராம். ஒருவேளை சீட் கிடைத்தால், அவர் திரு.வி.க.நகர் தொகுதியில் களமிறங்கலாம் என சொல்லப்படுகிறது.
Similar News
News December 15, 2025
செல்போன் ரீசார்ஜில் இனி இலவசம்.. ஜியோ ஆஃபர்

ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு ‘HAPPY NEW YEAR 2026’ என்ற பெயரில் புதிய பிளான்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ₹500-க்கு ரீசார்ஜ் செய்தால், 28 நாள்கள் வேலிடிட்டியுடன் தினமும் 2GB டேட்டா பயன்படுத்தலாம். அன்லிமிட்டெட் 5G சேவையும் கிடைக்கும். மேலும், ஹாட்ஸ்டார், யூடியூப் பிரீமியம் உள்ளிட்ட சந்தாவை பெறலாம். அதுமட்டுமின்றி, 18 மாதங்களுக்கு கூகுள் ஜெமினி புரோ சந்தாவை இலவசமாக பயன்படுத்தலாம். SHARE IT.
News December 15, 2025
ஒரு வாரத்திற்கு 4 நாள் வேலை செய்தால் போதுமா?

கடந்த மாதம் அமலான புதிய தொழிலாளர் சட்டத்தின் படி, வாரத்திற்கு 4 நாள் வேலை, 3 நாள்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவி வருகிறது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள தொழிலாளர் அமைச்சகம், ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்தால், வாரத்தில் 4 நாள் வேலை செய்வது போதுமானது; ஆனால் இது ஒரு ஆப்ஷன் மட்டுமே, நிறுவனமும் ஊழியர்களும் ஏற்று கொண்டால் இதை பின்பற்றலாம் என தெரிவித்துள்ளது.
News December 15, 2025
பூமியின் மிகப்பெரிய உயிரினங்கள் PHOTOS

பூமியில், மனிதர்களுக்கு முன் நீரிலும், நிலத்திலும் பிரம்மாண்டமான உயிரினங்கள் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இதற்கு சாட்சியாக பல்வேறு புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இதுவரை பூமியில் வாழ்ந்த உயிரினங்களிலேயே மிகப்பெரிய விலங்குகளை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். இதில் நீல திமிங்கலம் தற்போதும் வாழ்ந்து வருகிறது. அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.


