News January 13, 2025

2024-ம் ஆண்டில் 62 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

image

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 2024-ம் ஆண்டில் 62 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், குழந்தை திருமணங்கள் நடத்தியது தொடர்பாக 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, இதில் தொடர்புடைய 61 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், குழந்தை திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு ஏற்படும் உடல் நல மற்றும் மனநல பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

Similar News

News November 14, 2025

தருமபுரி: லாரி கவிழ்ந்து விபத்து!

image

தருமபுரி, பாப்பாரப்பட்டி அருகே பிக்கிலி ஊராட்சியில் சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதில் ஜல்லி ஏற்றி வந்த டிப்பர் லாரி பாப்பாரப்பட்டி அருகே நேற்று (நவ.13) காலை மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில், முத்தம்பட்டியை சேர்ந்த டிரைவர் ரமேஷ் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 14, 2025

தருமபுரி: இரவு நேர ரோந்துப் பணியில் காவலர்கள் விவரம்!

image

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (நவ.13) இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் சந்திரசேகரன் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் மகாலிங்கம் , தோப்பூரில் ராமகிருஷ்ணன் , மதிகோன்பாளையத்தில் ராமர் மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம்.

News November 13, 2025

தருமபுரியில் தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

image

தருமபுரி பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வரும் நவ.16 அன்று பகல் 12 மணியளவில் மக்களின் அடிப்படை உரிமையான வாக்குரிமையை பறிக்கும் இச்செயலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த கழகத் தலைமையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே தருமபுரி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து மாவட்ட, தொகுதி, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என சிவா தாபா அறிவித்துள்ளார்.

error: Content is protected !!