News November 15, 2025
20-ம் தேதி வரை மழை வெளுக்கும்

தென் இலங்கை மற்றும் அதனை ஒட்டி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக IMD தெரிவித்துள்ளது. அதன்காரணமாக, தமிழத்தில் வரும் 20-ம் தேதி வரை மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அடுத்த 3 நாள்களில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா? கமெண்ட் பண்ணுங்க.
Similar News
News December 10, 2025
இவர்களிடம் இருந்து கடனை திரும்பப் பெறுவது கடினமாம்..

கடன் கொடுப்பதை விட, அதை திரும்பப் பெறுவது தான் சிரமமாக உள்ளது என்பதே கடன் கொடுப்பவர்களின் புலம்பலாக உள்ளது. குறிப்பாக, ஜோதிடத்தின் படி மேஷம், மகரம், சிம்மம், மிதுனம், துலாம் ராசிக்காரர்களிடம் கொடுத்த கடனை திரும்பப் பெறுவது சிரமம் என நம்பப்படுகிறது. ஏனென்றால், சரியான திட்டமிடல் இல்லாததால், அவர்கள் அடிக்கடி பணப் பிரச்னையில் சிக்கிக் கொள்வார்களாம். உஷாரா இருங்க.
News December 10, 2025
டியூசன் டீச்சருக்கு நேர்ந்த அவலம்

சேலத்தில் டியூசன் டீச்சர் பாரதியின் மர்ம மரணத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது ஆண் நண்பரான தனியார் ஹாஸ்பிடலின் CEO உதய்சரண், பாரதியின் முகத்தில் தலையணையை வைத்து கொலை செய்துவிட்டு நாடகமாடியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கொலை செய்யப்பட்ட இளம்பெண் பாரதி மறைந்த அதிமுக பிரமுகர் டெல்லி ஆறுமுகத்தின் மகள் ஆவார்.
News December 10, 2025
ஆண்களே இதை கவனிக்கிறீர்களா?

ஹேர் ஸ்டைலில் அதிக கவனம் செலுத்தும் ஆண்கள், தலைமுடி பராமரிப்பிற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. ஷாம்புவை தேர்வு செய்யும்போது பின்வரும் அம்சங்களை கவனிக்கவும்: ▶Scalp-க்கு ஏற்ற ஷாம்புவை தேர்வு செய்யவும். ▶வறண்ட முடிக்கு சல்பேட் ஃப்ரீ ஷாம்பு சிறந்தது. ▶ஆயில் Scalp-க்கு clarifying ஷாம்பு ▶முடி உதிர்வுக்கு காஃபைன் ஷாம்பு ▶பொடுகு தொல்லைக்கு டாக்டர் பரிந்துரைக்கும் ஷாம்பு பயன்படுத்தவும். SHARE IT!


