News November 25, 2025

2 – 14% சரிந்த முக்கிய நிறுவனங்களின் பங்குகள்!

image

பங்குச்சந்தைகள் 2-வது நாளாக சரிவை கண்டுள்ளன. சென்செக்ஸ் 75 புள்ளிகள் சரிந்து 84,285 புள்ளிகளிலும், நிஃப்டி 14 புள்ளிகள் சரிந்து 25,944 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகின்றன. Wipro, Infosys, Nestle, Adani Enterpris உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் 2 – 14% வரை சரிவைக் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News

News January 25, 2026

பல ஆண்டுகள் ஒரே குக்கரை பயன்படுத்துறீங்களா?

image

வீட்டில் ஒரே குக்கரை பல ஆண்டுகளாக பயன்படுத்தினால், உடலில் காரீயம்(Lead – Pb) கலக்குமாம். இது உடல்நலத்திற்கு மிகவும் ஆபத்தானது என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக குழந்தைகளுக்கு மிக ஆபத்தானதாம். இதன் பாதிப்பின் அறிகுறிகள்: அதீத உற்சாகம் *தலைவலி *வாந்தி * குமட்டல் *ரத்தசோகை *வயிற்று வலி *உடலுறவில் நாட்டம் இல்லாமல் போவது *குழந்தையின்மை *சிறுநீரக பாதிப்பு. உஷாரா இருங்க!

News January 25, 2026

12 பேரை காதலித்த தமிழ் நடிகை

image

ஒருவரை காதலித்து கரம் பிடிப்பதே பெரிய சோதனையாக இருக்கும் நிலையில், இங்கு ஒருவர் 12 பேரை காதலித்து டேட்டிங் செய்திருக்கிறார். ‘பம்பாய்’, ‘இந்தியன்’, ‘பாபா’ படங்களில் நடித்து தமிழில் ஒரு கலக்கு கலக்கிய மனிஷா கொய்ராலா பீக்கில் இருந்த காலத்தில் 12 பேரை காதலித்துள்ளாராம். கடைசியாக, தொழிலதிபரான சாம்ராட் தஹாலை திருமணம் செய்த அவர், அடுத்த 2 வருடங்களிலேயே அவரை விவகாரத்து செய்துவிட்டார்.

News January 25, 2026

ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு மட்டும் போதாது: அன்புமணி

image

மொழிப்போர் தியாகிகள் தினத்தை கடைப்பிடிப்பதன் நோக்கம் ஹிந்தி திணிப்பை எதிர்ப்பது மட்டுமல்ல, தமிழை வளர்ப்பதும் தான் என அன்புமணி கூறியுள்ளார். தனது X-ல், தமிழ் கட்டாயப் பயிற்றுமொழி அரசாணை பிறப்பித்து 26 ஆண்டுகள் ஆகியும், இன்றுவரை நடைமுறைக்கு வரவில்லை என தெரிவித்துள்ளார். SC-ல் நிலுவையில் உள்ள இதுகுறித்த வழக்குகளை விரைவாக விசாரணைக்கு கொண்டுவர திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் சாடியுள்ளார்.

error: Content is protected !!