News August 7, 2024

2 இன்ஸ்பெக்டர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

image

முறைகேடு, லஞ்சம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் காவல்துறையினர் சிக்கினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் அருண் எச்சரித்து இருந்தார். இந்நிலையில், மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் முனியசாமி, பாண்டி பஜார் காவல் நிலைய ஆய்வாளர் புகழேந்தி ஆகிய இருவர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, இருவரையும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி ஆணையர் அருண் இன்று உத்தரவிட்டார்.

Similar News

News November 8, 2025

சென்னை: இனி உங்களுக்கு அலைச்சல் இல்லை!

image

சென்னை மக்களே! உங்களின் 10th, +2 மதிப்பெண் சான்றிதழ்கள் தொலைந்துவிட்டால், இனி கவலையில்லை. ஈஸியாக ஆன்லைனில் டவுன்லோடு செய்து கொள்ளலாம். தமிழ்நாடு அரசின் <>epettagam <<>>என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று, உங்களின் ஆதார் எண்ணைக் கொடுத்து உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் OTP-யை பதிவு செய்தால், உங்களின் சான்றிதழ்கள் அனைத்தையும் டவுன்லோடு செய்யலாம். ஷேர் பண்ணுங்க.

News November 8, 2025

6.42 லட்சம் விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன

image

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளில் 3,718 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான படிவம் வழங்கி வருகின்றனர். நேற்று வரை 6.42 லட்சம் பேருக்கு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் விண்ணப்ப படிவங்கள் வழங்கும் பணி முடிவடையும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

News November 8, 2025

சென்னை: விஜய்க்கு முதல்வர் மறைமுக பதிலடி!

image

திமுக – தவெக இடையே தான் வரும் தேர்தலில் போட்டி என தவெக தலைவர் விஜய் கூறி வருகிறார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், திமுக தலைவர் ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற திமுகவின் 75வது ஆண்டு விழாவில், ‘திமுகவின் வரலாறு தெரியாத சிலர் மிரட்டிப் பார்க்கின்றனர். அதிலும், சில அறிவிலிகள் திமுக போல் வெற்றி பெற்றுவிடுவோம் என பகல் கனவு காண்கின்றனர். திமுக போல் வெற்றி பெற அறிவும், உழைப்பும் தேவை’ என பேசினார்.

error: Content is protected !!