News November 14, 2025

19-ம் தேதி தமிழகம் வரும் PM மோடி

image

தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில், வரும் 19-ம் தேதி கோவையில் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள PM மோடி தமிழகம் வருகை தர உள்ளார். இந்த மாநாட்டில் 5,000-க்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகள், விஞ்ஞானிகள் பங்கேற்க உள்ளனர். அவர்களை PM மோடி சந்தித்து பேச உள்ளார். தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் வேளையில், PM மோடியின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Similar News

News December 10, 2025

ராசி பலன்கள் (11.12.2025)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

News December 10, 2025

பெற்றோர்களே இதை கவனியுங்க!

image

குழந்தைகளிடையே சமூக ஊடகங்களின் பயன்பாடு, அவர்களை வெகுவாக பாதிக்கும் என்று ஸ்வீடனின் கரோலின்ஸ்கா நிறுவனம் தெரிவித்துள்ளது. அவர்களால் நீண்ட நேரம் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த முடியாமல் போகும் என்றும், ADHD போன்ற அறிகுறிகள் உருவாகும் வாய்ப்பை அதிகரிக்கும் என்றும் எச்சரித்துள்ளது. மேலும், குழந்தைகளின் திரை நேரத்தைக் குறைப்பதில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிக்கை பரிந்துரைக்கிறது.

News December 10, 2025

செல்போன் ரீசார்ஜ் கட்டணம் உயர்கிறது

image

செல்போன் ரீசார்ஜ் கட்டணங்கள் மீண்டும் உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, 15% வரை கட்டணம் உயரலாம் என கூறப்படுகிறது. இதன்படி, பரவலாக பயன்படுத்தப்படும் 28 நாள்கள் வேலிடிட்டியுடன் கூடிய ₹299 பேக், ₹50 அதிகரிக்க வாய்ப்புள்ளதாம். இது நடுத்தர மக்களை பெரிதும் பாதிக்கும். கடந்த நவம்பரில், முன்னணி நிறுவனங்கள் தங்களது ப்ளானில் ₹10- 200 வரை உயர்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!