News August 6, 2024
தென் கொரியாவில் வெப்ப தாக்குதலுக்கு 1,546 பேர் பாதிப்பு!

தென் கொரியாவில் வெப்பம் தொடர்பான நோய்களுக்கு 2,35,880 கால்நடைகள் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. வட கொரியா வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், தென் கொரியா கடும் வெப்ப அலையைச் சந்தித்துவருகிறது. (1,546 பேர் பாதிப்பு, 11 பேர் உயிரிழப்பு). காலநிலை மாற்றத்தால், அந்நாட்டின் வெப்பநிலை 40° C-ஐ எட்டியுள்ளது. இது 2018ஆம் ஆண்டுக்கு பின் பதிவான அதிகப்படியான வெப்பநிலை என்று கூறப்படுகிறது.
Similar News
News January 12, 2026
ஒன்றாக டெல்லி செல்லும் நயினார், அண்ணாமலை

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை ஒன்றாக நாளை மாலை டெல்லி செல்கின்றனர். ஜன.14-ம் தேதி அமைச்சர் எல்.முருகன் வீட்டில் பிரதமர் மோடியுடன் பொங்கல் விழாவில் இருவரும் பங்கேற்கவுள்ளனர். அப்போது, தற்போதைய தமிழக அரசியல் சூழல், கூட்டணி, தொகுதிப்பங்கீட்டை இறுதி செய்வது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
News January 12, 2026
BREAKING: பொங்கலுக்கு கூடுதல் விடுமுறை! அரசு அறிவிப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போகி அன்றும் (ஜன.14) விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. முன்னதாக, ஜன.15 முதல் ஜன.17 வரை மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அரசு ஊழியர்கள், பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், ஒருநாள் கூடுதலாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
News January 12, 2026
வீட்டிலேயே பழங்களை வளர்த்து சாப்பிட ஆசையா?

தோட்டம் இல்லாதவர்களும் பழங்களை வளர்த்து சாப்பிட வேண்டுமா? வீட்டு மாடியில் அல்லது பால்கனியில் சில வகையான பழச் செடிகளை வளர்க்கலாம். குட்டை ரக செடிகள் ஏராளமாக உள்ளன. அவற்றை பூந்தொட்டியில் வைத்து வீடுகளிலேயே வளர்க்கலாம். இந்த செடிகளுக்கு 6-8 நேரம் சூரிய ஒளியும், சரியான பராமரிப்பும் தேவை. அந்த வகையில், என்னென்ன பழச் செடிகள் வளர்க்கலாம் என்பதை அறிய, மேலே உள்ள போட்டோக்களை ஸ்வைப் செய்து பாருங்க.


