News July 13, 2024

இந்திய அணிக்கு 153 ரன்கள் இலக்கு

image

இந்திய அணிக்கு 153 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஜிம்பாப்வே அணி. ஹராரே மைதானத்தில் நடைபெறும் 4ஆவது T20 போட்டியில், டாஸ் வென்ற IND, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ZIM, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ராஸா 46, தடிவனாஸே 32 ரன்கள் எடுத்தனர். IND அணி தரப்பில் கலீல் 2, தேஷ்பாண்டே, வா.சுந்தர், அபிஷேக், துபே தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

Similar News

News July 8, 2025

பாமகவில் தொடரும் மோதல்.. அதிமுகவுக்கு தாவிய Ex மா.செ.,

image

பாமகவில் ராமதாஸ் – அன்புமணி இடையே நடந்து வரும் மோதலால் அதிருப்தியில் பலர் சமீப காலமாக திமுக, அதிமுகவுக்கு புலம்பெயர்ந்து வருகின்றனர். அந்த வகையில் கடலூர் வடக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் காசி நெடுஞ்செழியன் தலைமையில் 400 பேர் அதிமுகவில் இணைந்தனர். நெய்வேலியில் நடைபெற்ற இந்த இணைப்பு விழா பாமகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நெய்வேலி பாமகவின் வாக்கு வங்கி அதிகம் உள்ள தொகுதியாகும்.

News July 8, 2025

கடன் செயலிகளில் கடன் வாங்குவதற்கு முன்..

image

உடனடி தேவைக்காக கடன் செயலியில் கடன் வாங்குவோர், இவற்றை கவனியுங்க:
*கடன் செயலிகளில் கடன் வாங்காமல் இருக்க வேண்டும்.
*வாங்க நினைத்தால், அந்த ஆப் ரிசர்வ் வங்கி அங்கீகாரம் பெற்றதா என்பதை கவனிக்கவும்
*அத்துடன் அந்த செயலி NBFC சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
*Playstore-ல் இருக்கும் ஆப்களை மட்டுமே பயன்படுத்தவும். மெசெஜ் வழியாக கிடைக்கும் ஆப்களில் கடன் பெற வேண்டாம்.

News July 8, 2025

Freshersகளுக்கு அதிக சம்பளம் வழங்கும் நகரம் எது?

image

முதல் சம்பளம் குறைவாக இருந்தாலும், அதிலிருக்கும் மகிழ்ச்சி அளவிட முடியாது என்பார்கள். அந்த வகையில் இந்தியாவில் எந்த நகரத்தில் Freshersகளுக்கு அதிக சம்பளம் வழங்கப்படுகிறது என ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதில் (₹30,100) வழங்கி சென்னை முதலிடத்திலும், ஹைதராபாத்(₹28,500), பெங்களூர் (₹28,400) என அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. சென்னை, ஹைதராபாத், அகமதாபாத் ஆகிய நகரங்கள் Freshersகளுக்கு Hotspot-ஆக உள்ளதாம்.

error: Content is protected !!